முதல் டெஸ்டில் இங்கிலாந்து செய்த தவறை செய்யாத ரோஹித்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி துவங்கியது. காலை 9.30 மணிக்கு ஹைதெராபாத் நகரில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும் ஏற்கனவே இங்கிலாந்து தங்களுடைய 11 பேர் கொண்ட அணியை நேற்று அறிவித்தது.

அதில் ஹைதராபாத் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதி 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்த அந்த அணி ஜேம்ஸ் ஆண்டர்சனை கழற்றி விட்டு மார்க் வுட்டை மட்டும் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனென்றால் ஒருவேளை எதிர்பார்த்தது போல் மைதானம் சுழலுக்கு சாதகமாக இல்லாமல் போனால் எப்படி வெல்ல முடியும் என்பதே இங்கிலாந்து ரசிகர்களின் கேள்வியாகும்.

- Advertisement -

இந்திய அணி:
மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டத்தை இழந்த ரோகித் சர்மா இந்திய அணியில் 2வது துவக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என்று அறிவித்தார். அத்துடன் 3வது இடத்தில் கில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் 2 போட்டிகளில் விலகிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலிக்கு பதிலாக கேஎல் ராகுல் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்குவார் என்று ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.

அதனால் கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக விளையாடும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் விளையாட உள்ளார். அதை விட இந்த போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடும் முக்கிய முடிவையும் ரோஹித் சர்மா எடுத்துள்ளார். அதாவது ஹைதராபாத் மைதானம் எப்படி இருந்தாலும் அதில் வெற்றி காண்பதற்காக இங்கிலாந்து போல் அல்லாமல் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் 3 சுழல் பந்து வீச்சாளர்கள் அடங்கிய சமநிலையுடன் கூடிய கூட்டணியை ரோகித் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அதில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முதன்மை ஸ்பின்னர்களாகவும் அக்சர் பட்டேல் 3வது ஸ்பின்னராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்து இத்தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி சொந்த மண்ணில் 12 வருடங்களாக தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: ஷேன் வார்னே கூட இந்தியாவில் சாதிச்சதில்ல.. இங்கிலாந்து அணியின் முடிவு மீது நாசர் ஹுசைன் அதிருப்தி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, கேஎஸ் பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

Advertisement