ஷேன் வார்னே கூட இந்தியாவில் சாதிச்சதில்ல.. இங்கிலாந்து அணியின் முடிவு மீது நாசர் ஹுசைன் அதிருப்தி

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்குகிறது. அதில் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் உலகில் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு தொடரில் தோற்காமல் இருந்து வரும் இந்தியாவை இம்முறை மண்ணை கவ்வ வைத்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.

அதற்காக ஒருநாள் முன்பாகவே இங்கிலாந்து நிர்வாகம் தங்களுடைய 11 பேர் கொண்ட அணியை தைரியமாக வெளியிட்டது. அதில் ஹைதெராபாத் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்து 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்துள்ள இங்கிலாந்து மார்க் வுட்டை மட்டும் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக தேர்ந்தெடுத்துள்ளது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்துள்ளது.

- Advertisement -

தடுமாறிய வார்னே:
ஏனெனில் ஒருவேளை ஹைதராபாத் மைதானம் எதிர்பார்த்தது போல் ஆரம்பக்கட்ட நாட்களில் சுழலுக்கு சாதகமாக இல்லாமல் போனால் இங்கிலாந்து முதல் போட்டியை வெல்வது கடினமாகி விடும். இந்நிலையில் 9 போட்டிகளில் வெறும் 34 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்த ஜாம்பவான் ஷேன் வார்னே கூட இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டதில்லை என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்தது சரி என்றாலும் அதற்காக ஜேம்ஸ் ஆண்டர்சனை கழற்றி விட்டது இங்கிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என அதிருப்தியை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “வரலாற்றில் சுழலை வைத்து இந்தியாவை மற்ற நாடுகள் தாக்கம் முயற்சித்ததை நீங்கள் பார்க்க வேண்டும். அதில் ஷேன் வார்னே இந்தியாவில் அல்லது சச்சின், ட்ராவிட், சேவாக், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோருக்கு எதிராக நிறைய விக்கெட்டுகளை எடுத்ததில்லை”

- Advertisement -

“தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணி சமநிலையுடன் இருக்கிறது. ஆனால் ரீகன் அஹமத் 2வது போட்டியில் மட்டுமே விளையாட உள்ளார். ஜேக் லீச் நீண்ட காலமாக பந்து வீசவில்லை. இருப்பினும் முதல் போட்டி மைதானம் சுழலும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் 3 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளரை மட்டும் தேர்வு செய்துள்ளனர்”

இதையும் படிங்க: ஒரு நிமிடமாவது.. இந்தியாவுக்கு நாம யாருன்னு காட்டணும்.. இங்கிலாந்துக்கு டேவிட் லாய்ட் அதிரடி கோரிக்கை

“ஆனால் வரலாற்றின் மகத்தான வீரர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் நீங்கள் கழற்றி விட்டுள்ளீர்கள். அவர் இந்தியா போன்ற துணைக் கண்டத்தில் சிறப்பான புள்ளி விவரங்களை வைத்துள்ளார். அதனால் ஒருவேளை முதல் போட்டியில் நீங்கள் டாஸ் வெல்லாமல் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இல்லாமல் இருந்தாலும் நீங்கள் ஸ்பின்னரை வைத்து தான் ஆரம்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement