ஒரு நிமிடமாவது.. இந்தியாவுக்கு நாம யாருன்னு காட்டணும்.. இங்கிலாந்துக்கு டேவிட் லாய்ட் அதிரடி கோரிக்கை

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்குகிறது. முன்னதாக சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தொடரில் இந்தியாவை சாய்ப்பதற்காக இங்கிலாந்து மொத்தம் 4 ஸ்பின்னர்களை தங்களுடைய அணியில் அறிவித்தது. குறிப்பாக இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாத சோயப் பஷீர் இந்த தொடரில் தேர்வாகியிருந்தார்.

ஆனால் இத்தொடரில் விளையாடுவதற்கு ஏனைய அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் உடனடியாக விசா வழங்கப்பட்ட நிலையில் சோயப் பஷீருக்கு மட்டும் கிடைக்கவில்லை. அதற்கு சோயப் பஷீர் குடும்பம் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதாலேயே இந்திய அரசு வேண்டுமென்று விசா வழங்காமல் தாமதம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

யாருன்னு காட்டுங்க:
அத்துடன் 2023 டெஸ்ட் தொடரின் போது ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவுக்கும் முஸ்லிம் என்பதால் இதே போல தாமதமாக விசா வழங்கப்பட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சோயப் பஷீருக்கு விசா கிடைக்கும் வரை தொடரை துவங்க மாட்டோம் என்று இந்தியாவுக்கு ஒரு நிமிடமாவது இங்கிலாந்து வாரியம் எதிர்ப்பு தெரிவித்து தங்களை யார் என்பதை காட்ட வேண்டுமென முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் அதிரடியான கோரிக்கை வைத்துள்ளார்.

இது பற்றி டெய்லி மெயில் பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு. “சோயப் பசீர் விவகாரத்தில் இங்கிலாந்து வாரியம் முடிவு எடுக்க வேண்டும். ஒன்று அவர்கள் அதை விட வேண்டும். அல்லது எங்களுடைய வீரர்கள் முழுமையாக கிடைக்காத வரை தொடரை துவங்க மாட்டோம் அல்லது அணியை மொத்தமாக இங்கிலாந்துக்கு திரும்பி அழைப்போம் என்று அவர்கள் இந்தியாவிடம் சொல்ல வேண்டும்”

- Advertisement -

“ஏனெனில் இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு வந்து விளையாடுவதற்கு நாங்கள் எப்போதும் தடை சொன்னதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் காரணமின்றி இங்கிலாந்து வீரரை மட்டும் இந்தியா நிறுத்துவது ஏன்? சொல்லப்போனால் கடந்த வருடம் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட உஸ்மான் கவாஜாவும் தாமதமாக விசா பெற்றார். என்னுடைய கண்ணோட்டத்தில் சோயப் பசீர் இந்தியாவில் இருக்கும் வரை வியாழக்கிழமை துவங்கும் முதல் போட்டியை நாம் தாமதிக்க வேண்டும்”

இதையும் படிங்க: மற்ற அணிகளை எல்லாம் விட சி.எஸ்.கே ஒரு பெஸ்ட் டீம்.. அதுக்கு காரணம் இவங்க தான் – மேத்யூ ஹைடன் கருத்து

“அவருக்கு நாம் தான் ஆதரவு கொடுக்க வேண்டும். ஏனெனில் இந்தியா நம்முடைய ஒரு வீரரை நிறுத்தியுள்ளது. அவர்கள் நம்முடைய ஒரு வீரரை தேர்வுக்கு தயாராக இல்லாமல் செய்து பேப்பரில் வேலை செய்ய வைத்துள்ளனர். ஹைதராபாத்தில் நடக்கும் முதல் டெஸ்டில் அவர் விளையாட முடியாத அளவுக்கு காலதாமதம் நீடித்து வந்தது என்று பிச்சைக்காரர்கள் நம்புகிறார்கள்” எனக் கூறியுள்ளார். இந்த சர்ச்சைக்குப் பின் பஷீருக்கு விசா கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement