ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் டிஎன்பிஎல் தொடரில் களமிறங்கும் 2 இந்திய அணி வீரர்கள் – எந்த அணிக்காக தெரியுமா?

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 17-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் ஜூலை 22-ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட உள்ளார். அதன்பின் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியுள்ளார்.

அவருடன் சமீபத்திய டி20 தொடர்களில் அசத்திய புவனேஸ்வர் குமார் போன்ற நட்சத்திரங்களுடன் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் விளையாட உள்ளார். அதுபோக தமிழகத்தின் மற்றொரு நம்பர் ஒன் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 மாதங்கள் கழித்து இந்திய வெள்ளைப் பந்து அணியில் இந்த தொடரின் வாயிலாக விளையாட உள்ளார். கடந்த 2010 – 2017 வரை வெள்ளைப் பந்து அணியில் நம்பர்-1 சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்த அவரை 2017 சாம்பியன்ஸ் டிராபியில் சுமாராக செயல்பட்டார் என்பதற்காக இந்திய நிர்வாகம் மொத்தமாக கழற்றிவிட்டது.

- Advertisement -

டிஎன்பிஎல் தொடரில்:
அதனால் அவரின் வெள்ளை பந்து கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக கருதப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த அஷ்வின் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் நேரடியாக தேர்வாகி 4 வருடங்கள் கழித்து அபார கம்பேக் கொடுத்தார். அதில் கிடைத்த வாய்ப்பில் அசத்திய அவர் அதன்பின் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் விளையாடி காயத்தால் வெளியேறிய நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவுக்காக விளையாட உள்ளார்.

மொத்தத்தில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 2 தரமான தமிழக வீரர்கள் விளையாட உள்ளனர். ஆனால் ஜூலை 29இல் துவங்கும் அந்த தொடருக்கு இன்னும் 10 நாட்கள் இடைவெளி உள்ளதால் அந்த நேரத்தை வீணடிக்காமல் அந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த 2 வீரர்களும் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் 6-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் விளையாட முடிவெடுத்துள்ளனர்.

- Advertisement -

அணி விவரங்கள்:
இதில் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பியுள்ள தினேஷ் கார்த்திக் நேரத்தை கொஞ்சமும் வீணாக்காமல் உடனடியாக ஏற்கனவே தம்மை ஒப்பந்தம் செய்துள்ள திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக ஜூலை 16-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற கோயம்பத்தூருக்கு எதிரான 20-வது லீக் போட்டியில் களமிறங்கினார். கோயம்புத்தூரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூருக்கு அவர் 3 பவுண்டரியுடன் 21 (16) ரன்களை எடுத்தார். இறுதியில் அப்போட்டியில் கோவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தற்போதைய நிலைமையில் அவர் விளையாடும் திருப்பூர் பங்கேற்ற 5 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. எனவே எஞ்சிய 3 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு அடுத்து வரும் போட்டிகளில் தம்மால் முடிந்த அளவுக்கு அவர் சிறப்பாக செயல்பட உள்ளார்.

- Advertisement -

அதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதை முடித்துவிட்டு நாடு திரும்பியதும் டிஎன்பிஎல் தொடரில் தம்மை ஒப்பந்தம் செய்திருந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக ஜூலை 16இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற சேப்பாக்கம் அணிக்கு எதிரான 21-வது லீக் போட்டியில் கேப்டனாக களமிறங்கினார்.

அப்போட்டியில் 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டும் கொடுத்த அஷ்வின் 1 விக்கெட் எடுத்து சிறப்பாக பந்து வீசிய போதிலும் இறுதியில் சேப்பாக்கம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தற்போதைய நிலைமையில் பங்கேற்ற 6 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 4 தோல்விகளின் பதிவு செய்துள்ள திண்டுக்கல் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலியின் ஆல்-டைம் சாதனையை உடைத்த பாபர் அசாம் – 2 வரலாற்று சாதனைகள் படைத்து அசத்தல்

எனவே எஞ்சிய 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் வெஸ்ட் இண்டீசுக்கு புறப்படுவதற்கு முன்பாக தனது திண்டுக்கல் அணிக்கு கேப்டனாக அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கொடுக்கும் அளவுக்கு அஷ்வின் சிறப்பாக செயல்பட போராட உள்ளார்.

Advertisement