நல்லா புரிஞ்சிகிட்டேன்.. 2023 உ.கோ ஃபைனலில் ரோஹித் என்னை எடுக்காத காரணம் அது தான்.. அஸ்வின் ஓப்பன்டாக்

- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா 6வது முறையாக வென்றது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் மற்றும் செமி ஃபைனலில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற போதிலும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.

முன்னதாக அகமதாபாத் நபர்கள் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய 240 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வியை கொடுத்தது. குறிப்பாக கடைசி 40 ஓவர்களில் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே எடுத்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

ரோஹித் நிலை:
அதை விட 137 ரன்கள் அடித்து வெற்றியை பறித்த ட்ராவிஸ் ஹெட்டுக்கு எதிராக ஃபைனலில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடியிருந்தால் நிச்சயம் இந்தியா தோற்றிருக்காது என்று ரசிகர்கள் தெரிவித்தனர். ஏனெனில் எப்போதுமே இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்களை எடுத்துள்ள அஸ்வின் அவரை அவுட்டாக்கியிருப்பார் என்று ரசிகர்கள் இப்போதும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் பெரிய அளவில் மாற்றங்களை செய்யாமல் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்ற இந்திய அணியில் கடைசி நேரத்தில் ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனேயே ஃபைனலில் தம்மை ரோகித் சர்மா தேர்ந்தெடுக்காமல் போயிருக்கலாமென ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி முன்னாள் வீரர் பத்ரிநாத் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னை பொறுத்த வரை ஃபைனலில் நான் விளையாடியிருந்தால் அதற்காக அணியின் கலவை போன்ற அனைத்தும் இரண்டாவதாக இருந்திருக்கும். இருப்பினும் அனைத்தும் மனதளவில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களாகும். இது மற்றொருவர் இடத்தில் இருந்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்ததாகும்”

“நான் ரோகித் சர்மாவின் இடத்தில் இருந்து பார்த்தால் வெற்றி நடை போட்டு வரும் அணியை மாற்றுவதைப் பற்றி 100 முறை யோசித்திருப்பேன். ஏனெனில் ஏற்கனவே இருந்த கலவை அணிக்காக சிறப்பாக சென்றது. அதனால் நான் ஏன் ஒரு வேகப்பந்து வீச்சாளரை பெஞ்சில் அமர வைத்து விட்டு 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டும்”

இதையும் படிங்க: பாண்டியா தான் காரணம்.. பும்ராவின் சோகமான இன்ஸ்டாகிராம் பதிவின் உண்மையை உடைத்த ஸ்ரீகாந்த்

“உண்மையாக ரோஹித் சர்மாவின் எண்ணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஃபைனலில் விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பாகும். அதற்கு நானும் 3 நாட்கள் முன்பிருந்தே தயாரானேன். அதே சமயம் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனால் இந்தியாவுக்காக வெறித்தனமாக கொண்டாடி ஆதரவு கொடுப்பதற்காக மனதளவிலும் தயாரானேன்” என்று கூறினார். முன்னதாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காதது இந்தியாவின் தோல்வியின் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement