பாண்டியா தான் காரணம்.. பும்ராவின் சோகமான இன்ஸ்டாகிராம் பதிவின் உண்மையை உடைத்த ஸ்ரீகாந்த்

- Advertisement -

அடுத்த வருடம் கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக நடைபெற உள்ள ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக டிரேடிங் முறையில் குஜராத் அணிக்காக விளையாடி வந்த கேப்டன் ஹர்டிக் பாண்டியாவை கடைசி நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் வாங்கியதுமிகப்பெரிய அனைவரையும் மொத்தமாக திரும்பி பார்க்க வைத்தது.

2015இல் ஐபிஎல் தொடரில் அறிமுகமான பாண்டியா 2021 வரை 4 கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றிய போதிலும் நாளடைவில் சுமாராக செயல்பட்டதால் மும்பை கழற்றி விட்டது. அப்போது 15 கோடி என்ற பெரிய தொகைக்கு நம்பி வாங்கிய குஜராத் கேப்டன்ஷிப் பொறுப்பையும் கொடுத்ததை பயன்படுத்திய பாண்டியா முதல் வருடத்திலேயே கோப்பையை வென்றும் 2வது வருடத்தில் ஃபைனல் வரையும் அழைத்துச் சென்று அசத்தினார்.

- Advertisement -

பும்ராவின் பதிவு:
அந்த நிலைமையில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா இருப்பதால் பாண்டியா ஏன் வாங்கப்பட்டார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. இருப்பினும் ரோகித்துக்கு பின் அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாண்டியாவை மும்பை இப்படி அதிரடியாக வாங்கியதாக நிறைய கருத்துக்கள் காணப்படுகின்றன.

மேலும் அந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாள் “சில நேரங்களில் அமைதியாக இருப்பதே சிறந்த விடை” என்று ஜஸ்ப்ரித் பும்ரா இன்ஸ்டாகிராம் பதிவிட்டதால் மும்பைக்கும் அவருக்கும் விரிசல் ஏற்பட்டதாக ரசிகர்கள் பேச துவங்கியுள்ளனர். இந்நிலையில் மும்பையின் அடுத்த கேப்டனாக வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் பாண்டியா திடீரென உள்ளே வருவதால் அந்த வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற ஆதங்கத்தில் பும்ரா அப்படி பதிவிட்டிருக்கலாம் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் அல்லது வெள்ளை பந்து என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் பும்ராவை போன்ற ஒரு பவுலரை நீங்கள் தற்போது பார்க்க முடியாது. அவர் தன்னுடைய மொத்த திறமையும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக கொடுத்தார். மேலும் 2022இல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டனாகவும் செயல்பட்டார்”

இதையும் படிங்க: இந்திய அணி மீண்டும் அதை தொடர்ச்சியா செய்வாங்க.. டிராவிட் மறுநியமனம் பற்றி கம்பீர் கருத்து

“அதனால் ஐபிஎல் தொடரில் மும்பையின் அடுத்த கேப்டனாக நாம் இருப்போம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் கடைசியில் பூமியிலேயே நீங்கள் தான் சிறந்தவர் (பாண்டியா) என்ற வகையில் மும்பை வேறு ஒருவரை நோக்கி சென்றுள்ளது. அதை அவர் நியாயமாக கருதவில்லை. பும்ரா கிரிக்கெட்டை தாண்டி மிகவும் நல்ல மனமும் குணமும் கொண்டவர். அப்படிப்பட்ட அவருக்கு இது போன்ற நிகழ்வு நிச்சயம் வலியை கொடுத்திருக்கும். குறிப்பாக பாண்டியா வந்ததை போல குஜராத்தை சேர்ந்த நான் பேசாமல் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டிருப்பேனே என்று பும்ரா நினைத்திருப்பார். எனவே பின்னணியில் ஏதோ ஒன்று நடந்துள்ளது. இதை மும்பை அணி தீர்க்க முயற்சிப்பார்கள் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement