இந்திய அணி மீண்டும் அதை தொடர்ச்சியா செய்வாங்க.. டிராவிட் மறுநியமனம் பற்றி கம்பீர் கருத்து

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா 6வது முறையாக வென்றது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து மிரட்டி வந்த இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகமாக அமைந்தது.

மேலும் இத்தொடருடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி நிறைவு பெற்றதால் விரைவில் விடை பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடந்த 2021இல் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்று சோதனை என்ற பெயரில் அடிக்கடி மாற்றங்களை செய்த அவரது தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் இந்தியா பெரும்பாலும் முக்கிய தொடர்களில் தோல்விகளையே சந்தித்தது.

- Advertisement -

தொடரும் இந்திய அணி:
அதனால் 2023 உலகக் கோப்பையுடன் உங்களுடைய சேவை போதும் என்று பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்த நிலையில் புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் அல்லது ஆசிஸ் நெக்ரா ஆகியோர் நியமிக்கப்படுவார்கள் என செய்திகள் வெளியானது. ஆனால் அங்கே மீண்டும் ட்விஸ்ட் வைத்துள்ள பிசிசிஐ குறைந்தபட்சம் 2024 டி20 உலகக் கோப்பை வரை ராகுல் டிராவிட் தலைமையிலான அதே பயிற்சியாளர் குழுவினர் தொடர்வார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பயிற்சியாளர் குழுவில் மாற்றத்தை செய்யாத பிசிசிஐயின் இந்த முடிவை வரவேற்பதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும் 2023 உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா தலைமையில் அதிரடியாக விளையாடி தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்த வெற்றி நடையை மீண்டும் இந்தியா தொடரும் என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது நல்ல முடிவாகும். ஏனெனில் டி20 உலகக் கோப்பை விரைவில் வரும் நிலையில் நீங்கள் மொத்த பயிற்சியாளர் குழுவும் ஒட்டுமொத்தமாக மாறுவதை விரும்ப மாட்டீர்கள். அந்த வகையில் இந்த பதவியில் தொடர்வதற்கு ராகுல் டிராவிட் ஒப்புக்கொண்டது நல்லதாகும். எனவே தற்போது நாம் விளையாடும் நல்ல அதிரடியான கிரிக்கெட்டை இந்த அறிவிப்பால் மீண்டும் தொடர்வோம் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரிங்கு சிங்கை ஃபினிஷர்ன்னு சொல்லாதீங்க.. அவரால் அதை செய்ய முடியுமான்னு பாக்கணும்.. நெஹ்ரா பேட்டி

அந்த வகையில் 2003இல் ஒரு வீரராகவும் 2007இல் ஒரு கேப்டனாகவும் தோல்விகளை சந்தித்து 2023இல் பயிற்சியாளராக உலகக் கோப்பை வெல்ல முடியாத ராகுல் டிராவிட் தற்போது கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். அதில் அவருக்கு அதிர்ஷ்டமும் சற்று கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement