ரிங்கு சிங்கை ஃபினிஷர்ன்னு சொல்லாதீங்க.. அவரால் அதை செய்ய முடியுமான்னு பாக்கணும்.. நெஹ்ரா பேட்டி

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்த பின் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா 3வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்கள் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அதில் ரிங்கு லோயர் மிடில் ஆர்டரில் இதுவரை களமிறங்கிய 2 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக கடைசி நேரத்தில் நிலவிய அழுத்தத்திற்கு அஞ்சாமல் அசால்டாக ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய அவர் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெறுவதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

ஃபினிஷர்ன்னு சொல்லாதீங்க:
2023 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்ததால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் இதுவரை அயர்லாந்து டி20, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தற்போதைய ஆஸ்திரேலிய தொடர் என தமக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அந்த வகையில் தோனிக்கு பின் ரிங்கு சிங் சிறந்த ஃபினிசராக வருவார் என்று ரசிகர்கள் பாராட்ட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ரிங்கு சிங்கை ஃபினிஷர் என்று சொல்ல வேண்டாம் எனக் ஆசிஸ் நெஹ்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் அவரால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும் என தெரிவிக்கும் நெஹ்ரா இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “இதை அவர் செய்வது முதல் முறையல்ல. நாம் அனைவரும் அவருடைய வேலை மற்றும் பவரை ஏற்கனவே விவாதித்துள்ளோம்”

- Advertisement -

“குறிப்பாக பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஃபீல்டிங் செய்யும் விதத்திலும் அவர் தம்மை அணியின் வீரராக காண்பிக்கிறார். தற்போது அவரை நாம் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே பேசுகிறோம். ஆனால் நாளை ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் விளையாடுவார். பொதுவாக ஃபினிஷர் என்ற வார்த்தையின் ரசிகன் நான் அல்ல. ஒருவேளை அவர் சதமடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தாலும் அதுவும் சிறப்பானதாகும்”

இதையும் படிங்க: கேமரூன் க்ரீனை வாங்கியது ஓகே.. அந்த ஓட்டைய ஏலத்தில் சரிப்பண்ண பாருங்க.. ஆர்சிபியை எச்சரித்த ஏபிடி

“இங்கே நான் கசப்பான உண்மையை சொல்கிறேன் சில முறை ரிங்கு சிங் போட்டியை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடியாமல் போனால் விமர்சனங்கள் வரலாம். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 4, 5 அல்லது 6 போன்ற இடங்களில் அவர் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். குறிப்பாக ஒரு மோசமான நாளில் இந்தியா 5 – 6வது ஓவரில் 40/4 என தடுமாறும் போது அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். எனவே அவரை ஃபினிஷர் என்று மதிப்பிடுவதை நான் விரும்பவில்லை” என கூறினார்.

Advertisement