IND vs AUS : அனில் கும்ப்ளேவின் ஆல் டைம் சாதனையை தகர்த்த அஷ்வின் – ஹர்பஜன் சாதனையையும் உடைத்து அபாரம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா குறைந்தது 3 போட்டிகளை வென்றால் தான் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் விளையாடி வருகிறது. அந்த நிலையில் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

IND vs AUS Siraj SMith

- Advertisement -

அதை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியா சுழலுக்கு சாதகமாக இருந்த அதே மைதானத்தில் சுமாராக பந்து வீசிய ஆஸ்திரேலியாவை சிறப்பாக எதிர்கொண்டு 400 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து 120 ரன்கள் எடுக்க லோயர் மிடில் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா 70 ரன்களும் அக்சர் பட்டேல் 84 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அறிமுகப் போட்டியில் அசத்தலாக செயல்பட்ட டோட் முர்பி 7 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

அஷ்வின் அசத்தல் சாதனை:
அதைத் தொடர்ந்து 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முன்பை விட படுமோசமாக பேட்டிங் செய்து வெறும் 91 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 25* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று உலகின் நம்பர் ஒன் அனியான ஆஸ்திரேலியாவை அசால்டாக தோற்கடித்துள்ளது.

IND vs AUS

இந்த வெற்றிக்கு 70 ரன்கள் 7 விக்கெட்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் 23 ரன்களும் 7 விக்கெட்களும் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார். குறிப்பாக 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் ஒரு இன்னிங்ஸில் அதிக முறை 5 விக்கெட்கள் எடுத்த வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்தார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஷ்வின் : 25* (52 போட்டிகள்)
1. அனில் கும்ப்ளே : 25 (63 போட்டிகள்)
2. ஹர்பஜன் சிங் : 18 (55 போட்டிகள்)

- Advertisement -

அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்துள்ள அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஷ்வின் : 489*
2. அனில் கும்ப்ளே : 486
3. ஹர்பஜன் சிங் : 406
4. ரவீந்திர ஜடேஜா : 366*
5. ஜஹீர் கான் : 349

ashwin

அது போக பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது வீரர் என்ற ஹர்பஜன் சிங், நேதன் லயன் சாதனையை தூளாக்கிய அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. அனில் கும்ப்ளே : 111
2. ரவிச்சந்திரன் அஸ்வின் : 97*
3. ஹர்பஜன் சிங்/நேத்தன் லைன் : தலா 95
4. ரவீந்திர ஜடேஜா : 70

இதையும் படிங்க: IND vs AUS : 36ஆல் அவுட்டுக்கு சின்னதாக பழி வாங்கிய இந்தியா – 42 வருடத்துக்கு பின் ஆஸ்திரேலியா மோசமான சாதனை

முன்னதாக ஏற்கனவே இப்போட்டியில் 450 விக்கெட்டுகளை அதிவேகமாக எடுத்த இந்திய வீரர் என்று அனில் கும்ப்ளே சாதனையை தகர்த்த அவர் 3000+ ரன்களையும் 450+ விக்கெட்டுகளையும் எடுத்த முதல் ஆசிய வீரர் என்ற வரலாற்று சாதனையும் படைத்திருந்தார். அப்படி தொடர்ந்து தனது மிகச்சிறந்த திறமையால் இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் ரவிச்சந்திரன் அஷ்வின் தமிழகத்துக்கும் தமிழக ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்து வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது.

Advertisement