IPL 2023 : டி20 உ.கோ ஜெயிக்கணும்னு நெனச்சா அந்த 2 பேருக்கு சான்ஸ் கொடுங்க – தேர்வுக்குழுவுக்கு சாஸ்திரி நேரடி கோரிக்கை

Shastri
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணிக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காகவும் விளையாடும் நோக்கத்தில் நிறைய இளம் இந்திய வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சிலிண்டர் விநியோகம் செய்யும் நபரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து கடுமையாக போராடி கடந்த சில வருடங்களாக கொல்கத்தா அணியில் விளையாடி வரும் ரிங்கு சிங் இந்த வருடம் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது 5 அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு அசாத்தியமான வெற்றியை சாத்தியமாக்கி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.

Rinku Singh

- Advertisement -

அதே போல பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே ரசல் கடைசி நேரத்தில் அவுட்டானதால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரியை பறக்க விட்டு வெற்றி பெற வைத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 2 போட்டிகளில் கடைசி பந்தில் வெற்றி பெறும் ரன்களை அடித்த வீரர் என்ற தோனி, மில்லர் போன்ற நட்சத்திர பினிஷர்கள் படைக்காத சாதனையை படைத்தார். அந்த வகையில் இந்த சீசனில் 300க்கும் மேற்பட்ட ரன்களை 150 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வரும் அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

உலககோப்பை வேணும்னா:
அவரை ஒரு படி மிஞ்சும் வகையில் இளமையில் வறுமையுடன் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பானி பூரி விற்று கிரிக்கெட்டின் மீதான காதலால் பயிற்சிகளைத் துவங்கி மும்பைக்காக விளையாடி 2020 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்து இந்தியாவை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற யசஸ்வி ஜெய்ஸ்வால் சமீப காலங்களுக்குவே ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஷ்டாக் அலி கோப்பை என அனைத்து உள்ளூர் தொடர்களிலும் இரட்டை சதங்களும் சதங்களும் அடித்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்.

Yashasvi Jaiswal 2

அதே வேகத்தில் இந்த ஐபிஎல் தொடரில் மிரட்டலாக செயல்படும் அவர் மும்பைக்கு எதிரான வரலாற்றின் 1000வது ஐபிஎல் போட்டியில் தனி ஒருவனாக 124 (62) ரன்களை விளாசி அனைவரது பாராட்டுகளை அள்ளினார். அதை விட கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே 26 ரன்கள் தெறிக்க விட்டு அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்த அவர் ராஜஸ்தானை வெற்றி பெற வைத்தார். அப்படி கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவர் இந்தியாவுக்கு விளையாடும் தகுதியை பெற்றுள்ளதால் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென நிறைய கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் ஜித்தேஷ் சர்மா போன்ற மேலும் சில இளம் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 2023 மற்றும் 2024 டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல விரும்பினால் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென ரவி சாஸ்திரி தேர்வு குழுவுக்கு நேரடியான கோரிக்கையை வைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை இந்திய அணி ஒருநாள் உலக கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்தினால் தேர்வுக் குழுவினர் நிச்சயமாக ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்”

Shastri

“குறிப்பாக இந்த வீரர்களுக்கு வேகமாக வாய்ப்பு கொடுத்து வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன் முதன்மையானவர்களாக மாற்ற வேண்டும். ஒருவேளை இது போன்ற தரமான வீரர்களை தேர்வு குழுவினர் தேர்ந்தெடுக்கவில்லை எனில் வேறு யாரை தேர்வு செய்வார்கள் என்பது எனக்கு தெரியாது” என்று கூறினார். அதே போல ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களால் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் பாதுகாப்பாக இருப்பதாக பாராட்டிய மற்றொரு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பற்றி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:IPL 2023 : இந்த ஐபிஎல் முடிஞ்சதும் அவருக்கு நேரடியா 11 பேர் இந்திய அணியில் சான்ஸ் கிடைக்கும் – இளம் வீரரை பாராட்டிய ரெய்னா

“யசஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைவதற்கான கதவை தட்டவில்லை. மாறாக தொடர்ச்சியான செயல்பாடுகளால் உடைத்துக் கொண்டிருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் கொண்டுள்ள நல்ல ஃபார்மை ஐபிஎல் தொடரிலும் அவர் தொடர்கிறார். அவரைப் போன்ற திறமையான வீரரால் இந்திய கிரிக்கெட் வருங்காலம் பாதுகாப்பாக உள்ளது” என்று கூறினார்.

Advertisement