2019 உலகக்கோப்பை இந்திய அணியில் அவர்தான் 4 ஆம் இடத்தில் விளையாடணும்னு ஆசைப்பட்டேன் – ரவி சாஸ்திரி கருத்து

Ravi-Shastri-Coach
- Advertisement -

கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அந்த தொடரின் போது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியானது அரையிறுதி வரை முன்னேறி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அந்த 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பலமான அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியின் நான்காம் இடத்தில் விளையாடிய பேட்ஸ்மேன் குறித்த சர்ச்சை தற்போது கூட பெரிய அளவில் பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது. ஏனெனில் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக வரை அம்பத்தி ராயுடு தான் நான்காவது இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அவரை கழட்டிவிட்ட இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு பதிலாக விஜய் ஷங்கரை அந்த இடத்தில் தேர்வு செய்தது. பின்னர் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என வீரர்கள் மாற்றி மாற்றி நான்காம் இடத்தில் களமிறக்கப்பட்டதால் இந்திய அணி அந்த உலக கோப்பை தொடரில் தோல்வியை சந்தித்தது என இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் நான்காம் இடத்தில் விராட் கோலி தான் பேட்டிங் செய்ய வேண்டும் என அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஆசைப்பட்டதாக வெளிப்படையான கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அணித்தேர்வின் போது தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத்திடம் நான் விராட் கோலி தான் நான்காவது இடத்தில் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். ஏனெனில் நான்காவது இடத்தில் களமிறங்கி ஏற்கனவே விளையாடியுள்ள விராட் கோலி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே அவருக்கே நான்காம் இடத்தில் விளையாடும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

துவக்கத்திலேயே இந்திய அணி 2-3 விக்கெட்டுகளை இழந்து விட்டால் நிச்சயம் விராட் கோலி போன்ற அனுபவம் உள்ள வீரர் நான்காவது இடத்தில் கச்சிதமாக இருந்து அணியை கரை சேர்ப்பார் என்பதாலே நான் அப்படி ஒரு முடிவை யோசித்தேன் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுவரை 39 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நான்காவது இடத்தில் களமிறங்கியுள்ள விராட் கோலி 55 ரன்கள் சராசரியுடன் 1767 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement