ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

Ravi-Shastri
- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு இந்தியாவில் முழுவதுமாக ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்திய அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப் போகிறது என்ற குழப்பமே அதிக அளவில் நீடித்து வருகிறது.

ஏனெனில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலம் காயமடைந்திருப்பது தற்போது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. அதோடு உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருப்பதினால் இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் அணியே பெரும்பாலும் உலகக்கோப்பை தொடருக்கான அணியாக இருக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது தற்போது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல் ராகுல் இடம்பெற வாய்ப்பில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

சமீப காலமாகவே ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கி ஒருநாள் போட்டிகளில் அசத்தலாக விளையாடி வரும் ராகுல் உலகக்கோப்பை தொடரிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனால் தற்போதைய நிலையில் அவர் காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதால் அவர் ஆசிய கோப்பை தொடருக்கான அணியின் பிளேயிங் லெவனிலும் இருக்க மாட்டார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை கே.எல் ராகுல் தற்போது தான் மெல்ல மெல்ல காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். எனவே அவர் ஆசிய கோப்பை தொடரில் இடம்பெறுவதும் கடினம் தான்.

இதையும் படிங்க : கவலைப்படாத இந்த வயசுலயே ரொம்ப கஷ்டப்படுற நீ நல்லா வருவ – இளம் இந்திய வீரருக்கு அஸ்வின் உத்வேக ஆதரவு

அதேபோன்று கே.எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும் உடனே அவரது பேட்டிங் திறனை பழைய நிலைக்கு கொண்டு வருவது முடியாத காரியம்தான் என ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement