உலகக்கோப்பை இந்திய அணியில் அந்த 3 இடதுகை வீரர்கள் டாப் 7-ல் இருக்க வேண்டும் – ரவி சாஸ்திரி கருத்து

Ravi-Shastri-IND
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில் அவர் அண்மையில் அளித்துள்ள ஒரு பேட்டி ஒன்றில் இந்திய அணியின் டாப் 7-ல் 3 இடதுகை வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

தற்போதைய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, சீனியர் வீரம் விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது நான்கு இடங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. அவர்களை தவிர்த்து இடம்பெறப் போகும் வீரர்களை நாம் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் என்னை பொருத்தவரை இந்திய அணியின் டாப் ஆர்டரில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் அவசியம் என்று நினைக்கிறேன். எப்பொழுதுமே இடதுகை ஆட்டக்காரர்கள் அணிக்கு சரியான சமநிலையை வழங்க கூடியவர்கள். டாப் ஆர்டரில் மூன்று பேர் இருந்தால் நிச்சயம் அது அணிக்கு நலனாக இருக்கும்.

தேர்வுக்குழு உறுப்பினர்கள் நிச்சயம் சிறப்பாக செயல்படும் வீரர்களை கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள். தற்போது திலக் வருமா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோன்று யாஷஸ்வி ஜெயஸ்வாலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

அவர்களை கட்டாயம் உலக கோப்பை தொடருக்கான அணியில் இணைக்க வேண்டும். அதுமட்டும் இன்றி கடந்த 6-8 மாதங்களாக விக்கெட் கீப்பிங் செய்வதோடு பேட்டிங்கிலும் இஷான் கிஷன் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரையும் அணியில் சேர்த்தால் சிறப்பாக தான் இருக்கும்.

இதையும் படிங்க : விளம்பரத்துல பாத்தேன் நல்லா தானே உடம்ப வெச்சிருக்கீங்க இந்திய அணிக்காக அதை செஞ்சா என்ன? பாண்டியா மீது கபில் தேவ் அதிருப்தி

அதேபோன்று ஜடேஜா ஏற்கனவே அணியில் இருப்பதால் மூன்று இடதுகை வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அவர் கூறியது போன்றே அண்மையில் இந்திய அணிக்காக அறிமுகமாகியிருந்த திலக் வர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் அவர்கள் இருவரையும் அணியில் இணைக்க கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ரசிகர்களும் தங்களது ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement