விளம்பரத்துல பாத்தேன் நல்லா தானே உடம்ப வெச்சிருக்கீங்க இந்திய அணிக்காக அதை செஞ்சா என்ன? பாண்டியா மீது கபில் தேவ் அதிருப்தி

Kapil Dev
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் கேப்டனாக தலைமை தாங்கிய ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியை சந்தித்த முதல் கேப்டன் என்ற பரிதாப சாதனை படைத்தார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் வருங்கால கேப்டனாக கருதப்படும் அவர் கடந்த 2016இல் அறிமுகமாகி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு குறுகிய காலத்திலேயே முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக உருவெடுத்தார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்று விமர்சித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் கருத்தை பொய்யாக்கும் வகையில் 2018 நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்து அசத்திய அவர் கபில் தேவுக்கு பின் ஒரு வழியாக இந்தியாவுக்கு வேகப்பந்து வைத்து ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் அளவுக்கு அசத்தினார். ஆனால் அதன் பின் சந்தித்த காயத்தால் தடுமாறிய அவர் 2021 டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

கபில் தேவ் விமர்சனம்:
இருப்பினும் மனம் தளராமல் காயத்திலிருந்து குணமடைந்து 2022 ஐபிஎல் கோப்பையை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் அப்போதிலிருந்து வெள்ளைப் பந்து அணியில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருங்கால கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இருப்பினும் கிரிக்கெட்டின் உயிர்நாடி என்ன டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான ஆர்வத்தையும் பயிற்சிகளையும் எடுக்காத அவர் 29 வயதிலேயே அதை மொத்தமாக புறக்கணித்து வருகிறார்.

மறுபுறம் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லாமல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட வெளிநாட்டு தொடர்களில் தடுமாறும் இந்தியாவுக்காக விளையாடுங்கள் என்று ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் அவரை கேட்டுக் கொண்டனர். ஆனாலும் ஐபிஎல் தொடரில் கிடைக்கும் பல கோடிகளுடன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினால் போதும் என்று நினைக்கும் அவர் அதற்கான ஆர்வத்தைக் காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் பார்த்த போது இந்தியாவிலேயே மிகச்சிறந்த உடற்கட்டை கொண்ட நபராக ஹர்திக் பாண்டியா தெரிந்ததாக கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அப்படி தற்போது ஃபிட்டாகியுள்ள பாண்டியா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருப்பது ஏமாற்றத்தை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் பாண்டியா மட்டும் தான் ஆல் ரவுண்டரல்ல அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரும் இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டர்கள் தான் என்று கோபத்தை வெளிப்படுத்திய அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“அவர் ஃபிட்டாக இல்லாதது போல் தோன்றவில்லை. இன்று ஒரு விளம்பர புகைப்படத்தில் நான் அவரை பார்த்தேன். அதில் அவர்கள் எடிட்டிங் செய்தார்களா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அதில் அவர் இந்த நாட்டிலேயே மிகவும் ஃபிட்டான உடலைக் கொண்ட ஒருவராக காட்சியளித்தார். எனவே நல்ல திறமையை கொண்டுள்ள அவர் அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். குறிப்பாக ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க:2023 உ.கோ : இதுல என்ன குழப்பம்? அந்த 2 இளம் வீரர்களை வெச்சு 4வது பேட்டிங் பிரச்சனையை ஈஸியா தீர்க்கலாம் – ப்ராட் ஹாக் ஆலோசனை

“இங்கே வீரர்களை யாருடனும் ஒப்பிடுவது சரியல்ல. கடந்த 20 – 30 வருடங்களில் நாமும் சில நல்ல தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளோம். அதே சமயம் முக்கிய போட்டிகளில் சாதிக்க உங்களுக்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் மட்டுமே தேவை என்பது கிடையாது. மாறாக சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களும் உங்களுக்கு தேவை. அந்த வகையில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் மிகச் சிறந்த வேலையை செய்து வருகின்றனர். எனவே நம்மிடம் போதுமான ஆல் ரவுண்டர்கள் இல்லை என்று அர்த்தமல்ல” என கூறினார்.

Advertisement