2023 உ.கோ : இதுல என்ன குழப்பம்? அந்த 2 இளம் வீரர்களை வெச்சு 4வது பேட்டிங் பிரச்சனையை ஈஸியா தீர்க்கலாம் – ப்ராட் ஹாக் ஆலோசனை

Brad Hogg
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக சாம்பியனை தீர்மானிக்கப் போகும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்குகிறது. அதில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் கூட சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தியாவது 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் இந்திய அணியில் கேஎல் ராகுல் போன்ற முதன்மை வீரர்கள் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பதும் நம்பர் 4வது இடத்தில் விளையாடுவதற்கான போதிய வீரர்கள் இல்லாமல் திண்டாடுவதும் ரசிகர்களுக்கு கவலையளிக்கும் ஏற்படுத்துகிறது.

2019 உலகக்கோப்பையில் அந்த இடத்தில் விளையாடுவதற்கு தகுதியாக இருந்த ராயுடுவை கழற்றி விட்டதிலிருந்தே துவங்கிய அந்த பிரச்சனையை சரி செய்ய விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் சோதிக்கப்பட்டனர். அதில் யாருமே காயம் மற்றும் சுமாரான ஃபார்ம் காரணமாக நிலைக்காத நிலையில் ஒரு வழியாக ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி 2022 ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

குழப்பம் எதுக்கு:
அதனால் அந்த இடத்தில் விளையாடுவதற்கு ஆள் கிடைத்து விட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் காயத்தை சந்தித்த அவருக்கு பதிலான சரியான மாற்று பேக்-அப் வீரர் இல்லாததே தற்போது பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த பிரச்சனையையும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத பிரச்சனையும் தீர்க்க ஒரே கல்லில் 2 மாங்காய் போல திலக் வர்மாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குணமடையாமல் போகும் பட்சத்தில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரை தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹாக் இதில் குழம்புவதற்கு எந்த அவசியமில்லை என கூறியுள்ளார். மேலும் டாப் ஆர்டரில் விளையாடப் பழகிய இசான் கிசான் 4வது இடத்திற்கு செட்டாக மாட்டார் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமாகி நல்ல முதிர்ச்சியுடன் சவாலான மைதானங்களில் அசத்திய திலக் வர்மா சரியானவராக இருப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஃபிட்டாக இல்லாமல் போகும் பட்சத்தில் அதற்கான மாற்று வீரர்கள் இந்த அணியில் தேவை. இருப்பினும் இசான் கிசான் லோயர் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்வார் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர் முழுமையான ஓப்பனிங் பேட்ஸ்மேன். ஆனாலும் ஒருவேளை ரோகித் சர்மாவுடன் அவர் தொடக்க வீரராக களமிறங்கினால் நான் 4வது இடத்தில் திலக் வர்மாவை தேர்ந்தெடுப்பேன்”

“இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பெரிய அளவில் விளையாடவில்லை என்றாலும் இந்த டி20 தொடரில் அனைத்து சூழ்நிலைகளிலும் தம்மால் அசத்த முடியும் என்பதை நமக்கு காட்டினார். அதே சமயம் ஒருவேளை அவர்கள் ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில்லை தொடக்க வீரராக களமிறக்கும் பட்சத்தில் இந்த உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனை நம்பர் 4வது இடத்தில் தேர்வு செய்யலாம். அந்த இடத்தில் அவரால் எதையாவது அசத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என கூறினார்.

இதையும் படிங்க:2019 உலகக்கோப்பை இந்திய அணியில் அவர்தான் 4 ஆம் இடத்தில் விளையாடணும்னு ஆசைப்பட்டேன் – ரவி சாஸ்திரி கருத்து

அவர் கூறுவது போல ஒருநாள் கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 390 ரன்களை 55.71 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். மறுபுறம் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகவில்லை என்றாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 1236 ரன்களை 56.2 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். எனவே இந்த இருவருமே உலகக்கோப்பை அணியில் பேக்-அப் அல்லது நேரடியாகவே தேர்வு செய்வதற்கு தகுதியானவர்கள் என்று சொல்லலாம்.

Advertisement