இதை செய்தால் டெஸ்ட் உட்பட மொத்த கிரிக்கெட்டும் இன்னும் பிரபலமாகும் – இந்திய ஜாம்பவான் புதிய ஆலோசனை

Ben Stokes Jasprit Bumrah ENG vs IND
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வருகையால் நூற்றாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட கிரிக்கெட்டின் உயிர் நாடியான டெஸ்ட் மவுசு குறைந்து அழியத் தொடங்கியது. ஏனெனில் 5 நாட்கள் முழுமையாக நடந்தும் முடிவை கொடுக்காமல் பெரும்பாலும் ட்ராவில் முடிவடையும் டெஸ்ட் போட்டிகளை விட வெறும் 3 – 4 மணி நேரத்தில் பரபரப்பான தருணங்களுடன் எதிர்பாராத திருப்பங்களை முடிவுகளாக கொடுக்கும் டி20 போட்டிகள் சமீபகாலங்களில் ரசிகர்களின் அபிமான கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது.

Jasprit Bumrah Team India

- Advertisement -

இருப்பினும் டெஸ்ட் போட்டிகள் தான் கிரிக்கெட்டின் உண்மையான இதயம் என்பதை கருத்தில் கொண்ட ஐசிசி அதைக் காப்பாற்றுவதற்காக 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பைகளை போல் தனியாக கடந்த 2019இல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை அறிமுகப்படுத்தியது. அதனால் தரவரிசையில் முதலிடம் பிடித்தால் கோப்பை கிடையாது, லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டியில் வென்றால் தான் கோப்பை என்ற நிலைமை ஏற்பட்டதால் டிரா செய்யாமல் வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மை அனைத்து அணிகளிடமும் ஏற்பட்டுள்ளது.

அதனால் சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகள் ஓரளவு உயிர்ப்பித்துள்ளது. ஆனால் அதிரடிக்கும் பொறுமைக்கும் இடையே நிற்கும் ஒருநாள் போட்டிகள் திடீரென்று சரியத் துவங்கியுள்ளது. ஏனெனில் பணத்திற்கும் பொழுதுபோக்கிற்காகவும் டி20 போட்டிகள் தரத்தை நிரூபிக்க டெஸ்ட் போட்டிகள் என்ற நிலைமை வந்து விட்டதால் சமீப காலங்களில் ஒருநாள் கிரிக்கெட்டின் மவுசு குறையத் துவங்கி விட்டது.

Team India IND vs ENg

சாஸ்திரியின் ஆலோசனை:
குறிப்பாக கடந்த வாரம் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் திடீரென்று ஓய்வு பெற்றது ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவை அனைத்திற்கும் டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படும் முறைதான் காரணம் என தெரிவிக்கும் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி வங்கதேசம், ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளை விட்டுவிட்டு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற முதல் தரமான 6 அணிகள் மட்டும் விளையாடுவதே டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தைம் உயர்த்தும் என்றும் கூறியுள்ளார். அப்படி செய்தால் அதிகமான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் விளையாடுவதற்கான காலமும் நேரமும் கிடைக்கும் என்று கூறும் அவர் இதுபற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் 12 அல்லது 10 அணிகளை வைத்து தரத்துடன் விளையாட முடியாது. டாப் 6 அணிகளை மட்டும் வைத்துக் கொண்டு போட்டிகளின் எண்ணிக்கையைவிட தரத்திற்கு மதிப்பு கொடுங்கள். இப்படி செய்தால் மட்டுமே இதர போட்டிகள் விளையாடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். கிரிக்கெட்டை வளர்க்க நீங்கள் விரும்பினால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிக அணிகளை ஈடுபடுத்துங்கள். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளை குறைக்க வேண்டும்” என்று கூறினார்.

Shastri

மேலும் வரும் காலங்களில் சர்வதேச வெள்ளைப்பந்து போட்டிகளை கால்பந்து போல உலக கோப்பைகளை மட்டும் நடத்திவிட்டு எஞ்சிய நாட்களில் டி20 லீக் தொடரை நடத்தினால் கிரிக்கெட் மேலும் பிரபலமாகும் எனக்கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இதற்கு அடிப்படையான தீர்வு கால்பந்தாகும். ஈபிஎல், லா லிகா, சௌத் அமெரிக்கா, கோபா அமெரிக்கா தொடர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல் வருங்காலங்களில் ஒரு பிரம்மாண்ட உலக கோப்பை தொடரை மட்டும் நடத்திவிட்டு எஞ்சிய அனைத்தையும் டி20 லீக் தொடராக உலகம் முழுவதிலும் நடத்தலாம்”

- Advertisement -

“இந்தியா, ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து என எந்த நாடாக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முதலில் நீங்கள் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அது நடைபெற்றால் இங்கிலாந்துக்கு வெஸ்ட்இண்டீஸ் சென்றாலும் வெஸ்ட் இண்டீசுக்கு இங்கிலாந்து செல்லவில்லை என்றாலும் பிரச்னை கிடையாது. ஏனெனில் முதல் 6 இடத்தில் நீங்கள் இருந்தால் விளையாடப் போகிறீர்கள், இல்லையேல் விளையாட போவதில்லை” என்று கூறினார்.

INDvsSL

அதாவது தரமில்லாமல் எத்தனை போட்டிகள் நடைபெற்றாலும் அதில் சுவாரசியம் இருக்காது என்பதால் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்காது என்று தெரிவிக்கும் ரவி சாஸ்திரி டெஸ்ட் போட்டிகள் நீண்ட நாட்கள் நீடித்து விளையாடுவதற்கு தரம் முக்கியமே தவிர எண்ணிக்கை முக்கியம் கிடையாது என்று ஆழமாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “உங்களை சோதிக்கும் டெஸ்ட் போட்டியில் தரம் இருக்க வேண்டும். அதில் தரமில்லை என்றால் யார் பார்க்கப் போகிறார்கள்? உங்களது எதிரணி பலமாக இல்லை என்றால் நீங்கள் 2 – 3 நாட்கள் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள்”

இதையும் படிங்க : IND vs WI : ஷிகர் தவான் ரன்கள் அடித்தும் வேஸ்ட் தான் – அணி நிர்வாகம் மீது முன்னாள் வீரர் அதிருப்தி, எதற்குனு பாருங்க

“மேலும் டெஸ்ட் விளையாடிய அனுபவமில்லாத அயர்லாந்து போன்ற நாடுகளை இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு வரவழைத்து விளையாட வைத்தால் இரண்டரை நாட்களில் போட்டி முடிந்து விடும். ஆனால் அதுபோல் நடந்தால் நீங்கள் பணத்தைப் கொடுக்கும் ஒளிபரப்பாளர்களையும் ரசிகர்களையும் மகிழ்ச்சி படுத்த முடியாது. எனவே வருங்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து நீடிக்க அனைத்தையும் விட தரம் மிகவும் முக்கியமானதாகும்” என்று கூறினார்.

Advertisement