IND vs WI : ஷிகர் தவான் ரன்கள் அடித்தும் வேஸ்ட் தான் – அணி நிர்வாகம் மீது முன்னாள் வீரர் அதிருப்தி, எதற்குனு பாருங்க

Shikhar-Dhawan
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. ஜூலை 22-ஆம் தேதியான நேற்று போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் துவங்கிய முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பொறுப்பாக விளையாடி 308/7 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த சுப்மன் கில் 64 (53) ரன்களும் அவரைவிட நங்கூரமாக பேட்டிங் செய்த கேப்டன் ஷிகர் தவான் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 97 (99) ரன்கள் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

Dhawan 2

- Advertisement -

அவர்களுடன் ஸ்ரேயாஸ் ஐயர் 54 (57) ரன்களும் தீபக் ஹூடா 27 (32) ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மோட்டி ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 309 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 75 (68) ரன்களும் ப்ரூக்ஸ் 46 (61) ரன்களும் ப்ரெண்டன் கிங் 54 (66) ரன்களும் எடுத்து போராடி ஆட்டமிழந்தனர்.

பலி ஆடாக தவான்:
கடைசியில் அகில் ஹொசைன் 32* (32) ரோமரியா செபார்ட் 39* (25) என அதிரடியான ரன்களை எடுத்த போதிலும் முகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது 11 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 50 ஓவர்களில் 305/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் திரில் வெற்றியை சுவைத்த இந்தியாவுக்கு 97 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Dhawan

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியால் கடந்த 2013இல் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்று ரோகித் சர்மாவின் சிறந்த பார்ட்னராக கடந்த 2014, 2015, 2016, 2017, 2019 ஆகிய உலக கோப்பைகளில் நிரந்தர வீரராக விளையாடி வந்த இவர் கடந்த 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறினார்.

- Advertisement -

அதனால் அவரது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற கேஎல் ராகுல் அவரை விட மிகச் சிறப்பாக செயல்பட்டதால் காயத்திலிருந்து குணமடைந்த பின்பும் ஷிகர் தவானை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் 35 என்ற வயதை தாண்டி விட்டார் என்பதுன் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் குவிக்க தடுமாறுகிறார் என்பதையும் காரணமாக காட்டி அவரை கழற்றி விடத் தொடங்கியுள்ளது. இருப்பினும் அவரின் அனுபவத்தையும் இதற்கு முன் வரலாற்றில் பெற்றுக்கொடுத்த வெற்றிகளையும் கருத்தில் கொண்டு கடந்த 2021 ஜூலையில் இலங்கை மண்ணில் நடந்த தொடரில் இதேபோல் கேப்டன்ஷிப் பதவியை கொடுத்து பின்பு 6 மாதங்கள் கழற்றி விட்டது.

Dhawan

வேஸ்ட் தான்:
அதன்பின் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்று சிறப்பாக விளையாடிய அவருக்கு சமீபத்திய இங்கிலாந்து தொடரில் வாய்ப்பளித்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டனாக்கியுள்ள தேர்வுக்குழு அடுத்ததாக வழக்கம் போல கழற்றி விடவும் தயாராகியுள்ளது. இந்த அனைத்து வாய்ப்புகளுமே கேஎல் ராகுல், ரோஹித் சர்மா காயமடைந்தால் அல்லது ஓய்வெடுத்தால் போனால் போகட்டும் என்ற வகையில் கொடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதனால் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா இந்த தொடரில் பெரிய ரன்களை எடுத்தாலும் உலக கோப்பை போன்ற முதன்மையான தொடர்களில் தவானுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறியுள்ளார். இது பற்றி வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் பேசியது பின்வருமாறு. “பலவீனமான அணிகளுக்கு எதிராக இது தவிர வேறு என்ன நடக்கப்போகிறது. ஷிகர் தவானின் வருங்காலம் பற்றி எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது.

Ajay

அவர் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஏனெனில் 6 மாதத்துக்கு முன்பு நீக்கப்பட்ட அவருக்கு பதில் கேஎல் ராகுல் மற்றும் இளம் வீரர்களை நோக்கி அணி நிர்வாகம் நகர்ந்துவிட்டது. அதன்பின் திடீரென்று கடந்த வருடம் இலங்கை தொடரில் அவர் கேப்டனாக செயல்பட்டார். அடுத்ததாக மீண்டும் நீக்கப்பட்டார்”

இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் தவானுடன் அசத்தலான சாதனை பட்டியலில் இடம்பிடித்த – ஷ்ரேயாஸ் ஐயர் (டாப் 5 இதோ)

“பின் மீண்டும் இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டு இங்கே விளையாடுகிறார். அவரைப்பற்றி அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது? குறிப்பாக முதன்மையான வீரர்களுடன் அதிரடியாக விளையாட நினைக்கும் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான அணியில் அவர் நிச்சயம் இடம் பெறப்போவதில்லை” என்று கூறினார். இருப்பினும் கேஎல் ராகுல் – ரோஹித் சர்மா எனும் தொடக்க ஜோடியை விட ஷிகர் தவான் – ரோகித் சர்மா என்ற இடது – வலது கை ஓப்பனிங் ஜோடியே 2023 உலக கோப்பையில் விளையாட சிறந்தது என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Advertisement