இவரை மட்டும் அவசரப்பட்டு டீம்ல சேத்துடாதீங்க ப்ளீஸ். அவருக்கு இன்னும் பிராக்டீஸ் வேனும் – ரவி சாஸ்திரி கருத்து

Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே டெல்லி மைதானத்தில் கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இன்று நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

INDvsRSA

- Advertisement -

ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தும் பந்து வீச்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணியில் உம்ரான் மாலிக்கை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகின்றன. ஏனெனில் ஐபிஎல் தொடரில் தனது வேகத்தால் சர்வதேச பேட்ஸ்மேன்களை திணற வைத்த உம்ரான் மாலிக் பயிற்சியின் போதும் அதிவேக பந்தினை வீசி உள்ளதால் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்கிற விவாதம் சமூகவலைதளத்தில் எழுந்து உள்ளது.

ஆனால் உம்ரான் மாலிக்கை அவசரப்பட்டு இந்திய அணியில் சேர்த்துவிட வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது தான் உம்ரான் மாலிக் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார். அவரை இந்திய அணியில் நேரடியாக விளையாட வைக்க கூடாது. தற்போதைக்கு அவர் இந்திய அணியின் சீனியர் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்து வந்தாலே அவருக்கு நல்ல நம்பிக்கை கிடைக்கும்.

umran

மேலும் அவருக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் கொடுத்து சீனியர் வீரர்களுடன் பஷக விட வேண்டும். இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வாறு அழுத்தங்களை சமாளித்து விளையாடுவது என்பதை கற்றுக் கொள்வார். மேலும் தனது பந்துவீச்சிலும் மெல்ல மெல்ல அவர் முன்னேற்றத்தையும் காண்பார்,

- Advertisement -

என்னை பொருத்தவரை தற்போது அவருக்கு டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. வேண்டுமென்றால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் அவசரப்பட்டு நாம் டி20 அணியில் அவருக்கு இடம் கொடுத்தால் அவர் சர்வதேச கிரிக்கெட்டிற்கு தயாராகும் கால அவகாசம் இன்றி அதிக அழுத்தங்களை சந்தித்து பந்துவீச்சில் பெரிய சரிவை சந்திப்பார்.

இதையும் படிங்க : IND vs RSA : தோல்வியிலும் இந்திய அணிக்கு கிடைத்த மெகா ஆதரவு – தெ.ஆப்பிரிக்காவை சாய்க்குமா?

எனவே அவருக்கு தேவையான கால அவகாசத்தை கொடுத்து அவரின் திறனை மேம்படுத்திய பின்னரே அவரை அணியில் சேர்க்க வேண்டும். டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் உம்ரான் மாலிக்கை சேர்க்க வேண்டாம் என்பதே எனது கருத்து என ரவிசாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement