வாழ்க்கையில் எதுமே நிரந்தரம் கிடையாது. கங்குலி குறித்து புதிரான பதிலை அளித்த – ரவி சாஸ்திரி

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யின் தலைவர் பொறுப்பில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். போட்டியின்றி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சௌரவ் கங்குலிக்கு விருப்பம் இருந்த போதிலும் தற்போது இரண்டாவது முறையாக பி.சி.சி.ஐ-யின் தலைவர் பதவி அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் தலைவராக கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Ganguly

- Advertisement -

இந்நிலையில் அவர்களது பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ள வேளையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு ஜெய்ஷா செயலாளராக நீடிக்க இருக்கிறார். அதே வேளையில் கங்குலி இந்த பதவியில் இருக்க விருப்பப்பட்டாலும் ரோஜர் பின்னி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளதால் கங்குலி இந்த பதவியிலிருந்து வெளியேற இருக்கிறார்.

என்னதான் கங்குலி இந்த பதவியில் இல்லை என்றாலும் ஐசிசி-யின் தலைவர் பதவிக்காக போட்டியிடவே பிசிசிஐ-யின் தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் கங்குலிக்கு பதிலாக ரோஜர் பின்னி பிசிசிஐ-யின் தலைவராவது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் :

Ganguly-2

ரோஜர் பின்னி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பதவி ஏற்பதை வரவேற்கிறேன். உலகக் கோப்பை தொடரை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த என்னுடைய சகவீரர் இந்த பொறுப்பை ஏற்க இருப்பதில் மகிழ்ச்சி. கர்நாடக மாநில கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த அவர் தற்போது பிசிசிஐ-யின் தலைவராகவும் இருப்பதற்கு அனைத்து தகுதியையும் பெற்றவர்.

- Advertisement -

அவர் ஒரு உலகக் கோப்பையை வென்றவர். அதோடு மட்டுமின்றி நேர்மையான உள்ளம் கொண்ட அவர் நல்ல குணாதிசயங்களை பெற்றவர். மைதானத்தில் உள்ள வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு வேண்டுகோள்களை அவரிடம் வலியுறுத்துவோம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். மேலும் கங்குலி குறித்து பேசிய அவர் : வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : இலங்கையை அசால்ட்டாக ஊதி தள்ளிய இந்திய சிங்கப்பெண்கள் – முடி சூடா அரசியாக படைத்த அபார சாதனை இதோ

இன்றைக்கு நான் ஏதாவது செய்கிறேன். ஆனால் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அதையே செய்வேன் என்பது கிடையாது. புதியவர்கள் வருவார்கள் பொறுப்பேற்பார்கள் இதுவும் ஒரு விதத்தில் ஆரோக்கியமானது தான் என புதிரான ஒரு கருத்தை கங்குலியின் பதவி விலகல் குறித்து ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement