- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அது அவங்களுக்கே நல்லா தெரியும்.. விராட் கோலி ரோஹித் சர்மா எதிர்காலம் குறித்து – ரவி சாஸ்திரி பேச்சு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், அனுபவ வீரர்களுக்கான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர். அதன்காரணமாக இனி அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 2027 உலக கோப்பை தொடர் வரை விளையாட வேண்டும் என்பதே அவர்களது இலக்காக இருந்து வருகிறது.

ரோஹித் சர்மா, விராட் கோலி தொடர்ந்து நீடிப்பது கடினம் : ரவி சாஸ்திரி

அப்படி அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை தொடர் விளையாடி முடித்த கையோடு அவர்கள் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற விரும்புகின்றனர். ஆனால் அடுத்த உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதாலும், அதற்கு முன்னர் ரோகித் சர்மாவிற்கு 40 வயதும், விராத் கோலிக்கு 38 வயதாகிவிடும் என்பதனால் அவர்கள் தொடர்ந்து அணியில் நீடிக்க வாய்ப்பு இல்லை என்றும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் தொடரில் இவர்கள் இருவரும் இடம் பெற்றிருந்தாலும் அந்த தொடரே அவர்களது கடைசி தொடராகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 50 ஓவர் போட்டிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மாவும் தங்களது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதை உணர்ந்து இருப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இருவருமே தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் உடற்தகுதி, பார்ம் மற்றும் ஆர்வம் ஆகியவற்றை பொறுத்து இந்த தேர்வு அமைந்திருக்கலாம். ஆனால் இந்த தொடரில் அவர்களது செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை பார்ப்பது மிகவும் அவசியம்.

- Advertisement -

ஏனெனில் இந்த தொடரின் முடிவில் அவர்கள் தங்களது உணர்வுகளை அறிவார்கள். அதன் பின்னர் அது அவர்களின் முடிவு. ஆனால் என்னை பொறுத்தவரை இருவருமே தனிப்பட்ட முறையில் இளம் வீரர்கள் தங்களை தள்ளுவதை அறிவார்கள். எனவே அவர்களின் கரியர் கடைசி கட்டத்தில் இருப்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.

இதையும் படிங்க : குஜராத் டைட்டன்ஸ் வேணாம்.. சி.எஸ்.கே வுக்கு வாங்க.. சாய் சுதர்சனுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் – விவரம் இதோ

இந்திய அணியை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டை காட்டிலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வலுவான அணியாக இருக்கிறது. குறிப்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா போன்ற பல்வேறு இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -