குஜராத் டைட்டன்ஸ் வேணாம்.. சி.எஸ்.கே வுக்கு வாங்க.. சாய் சுதர்சனுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் – விவரம் இதோ

Sai Sudharsan
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இடது கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் கடந்து 2022-ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 40 ஆட்டங்களில் விளையாடி 2 சதம் மற்றும் 12 அரைசதம் என 49.8 சராசரி உடன் 1893 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய அவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

சி.எஸ்.கே வுக்கு வாங்க சார் சுதர்சன் : இந்திய ரசிகர்கள் வேண்டுகோள்

அதேபோன்று இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வாய்ப்பினை பெற்ற அவர் தற்போது புஜாராவின் மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் அவர் முதல் போட்டியில் பெரியளவில் சோபிக்கவில்லை.

- Advertisement -

இருந்தாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்களை குவித்திருந்தார். தனது முதல் டெஸ்ட் சதத்திற்கு வெகு அருகில் வந்து அவர் சதத்தை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் முதல் விக்கெட்டாக ஜெய்ஸ்வால் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதும் களத்திற்கு வந்த சாய் சுதர்சன் தற்போது வரை 47 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியின் போது சாய் சுதர்சன் விளையாடிக் கொண்டிருக்கையில் பவுண்டரி லைனில் அருகில் இருந்த ரசிகர்கள் பலரும் அவரை நோக்கி : குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறி சிஎஸ்கே அணிக்கு வந்து விடுங்கள். சிஎஸ்கே அணிக்கு நீங்கள் வரவேண்டிய தேவையுள்ளது என்பது போன்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இதையும் படிங்க : நிதீஷ் ரெட்டியை எதுக்கு டீமில் எடுத்தீங்க.. சுப்மன் கில் செய்த தவறால் விமர்சிக்கும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

இப்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் பலரும் அழைத்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement