ரோஹித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய – முன்னாள் கோச் ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தற்போது ரோகித் சர்மாவின் புதிய கேப்டன் நியமனம் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உடன் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாக பழகிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்கள் இருவரின் பலம் மற்றும் பலவீனங்களை சரியாக அறிந்தவர். டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் நியூசிலாந்து அணிக்கு டி20 தொடரை ரோகித் சர்மா வழிநடத்தினார். அதன் பிறகு அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

shastri 1

- Advertisement -

ரோஹித் சர்மாவின் இந்த அதிரடி நியமனம் கோலி ரசிகர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையை கணக்கில் கொண்டே தற்போது இந்திய தேர்வாளர்கள் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்துள்ளனர்.

மேலும் இந்திய அணியை பலப்படுத்தும் நோக்கில் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக கொண்டு வந்தது மட்டுமின்றி கேப்டன்சியிலும் மாற்றம் செய்து இந்திய அணியை தற்போது கட்டமைத்து வருகின்றனர். ஐ.பி.எல் போட்டிகளில் வெற்றிகரமான கேப்டன் என்பது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டிலும் 32 லிமிடெட் ஓவர் போட்டிகளை தலைமை தாங்கியுள்ள அவர் அதில் 26 போட்டிகளில் வெற்றியும் பெற்று சிறந்த கேப்டன் என்பதையும் நிரூபித்துள்ளார்.

Shastri

இந்நிலையில் ரோஹித்தின் இந்த நியமனம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வர தற்போது முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கேப்டனாக ரோஹித்தின் நியமனம் எதிர்பார்த்த ஒன்றுதான். அவர் நிச்சயம் போட்டியின் தன்மையை அறிந்து தந்திரமாக செயல்பட கூடிய ஒரு நல்ல கேப்டன் தான். எப்போதுமே மக்கள் போட்டியின் முடிவுகளை தான் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவிடம் இருந்த கேப்டன்சியை முதலில் பார்த்தது இவர்தானாம் – பிரக்யான் ஓஜா ஓபன்டாக்

அந்த வகையில் ரோஹித் சர்மா சிறப்பான கேப்டன் தான். அதேபோன்று ரோஹித் ஒரு முதிர்ச்சியான வீரர். இந்திய அணிக்கு கேப்டன்சி செய்வது என்பது எளிது கிடையாது. இந்திய அணிக்காக அவர் செய்த சாதனைகளையும், தற்போதைய கேப்டன் பதவியை நினைத்தும் அவர் பெருமை கொள்ளலாம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement