ரோஹித் சர்மாவிடம் இருந்த கேப்டன்சியை முதலில் பார்த்தது இவர்தானாம் – பிரக்யான் ஓஜா ஓபன்டாக்

Ojha
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஏற்கனவே விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது டி20 கிரிக்கெட்டின் கேப்டனாக பொறுப்பேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அணியை வெற்றிகரமாக வழி நடத்தினார். அதனை தொடர்ந்து அடுத்ததாக நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானேவிற்கு பதிலாக துணை கேப்டனாக அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த அவர் கோலிக்கு பதிலாக ஒரு நாள் கிரிக்கெட் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

Rohith

எனவே இனி வரும் தொடர்களில் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்-க்கு கேப்டன்சி செய்யப்போகும் ரோகித் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்நிலையில் ரோஹித்திடம் உள்ள கேப்டன்சியை முதல் முறை பார்த்து கண்டறிந்தது யார் என்பது குறித்தும், ரோஹித்தின் லீடர்ஷிப் எப்போது உதிர்த்தது என்றும் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் மும்பை அணிக்கு முதல் முறை வரும் போது அவர் ஒரு கேப்டனாக தேர்வு செய்யப்படவில்லை. மெதுவாக துவங்கி தற்போது மும்பை அணியின் மிகப்பெரிய கேப்டனாக விளங்கி வருகிறார். ஆனால் அவரிடம் கேப்டன்சி திறன் இருப்பதை கண்டறிந்தது ஆடம் கில்கிறிஸ்ட் தான். ஐபிஎல் தொடரின்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ரோஹித் விளையாடுகையில் அவரை துணை கேப்டனாக நியமிக்க கில்க்ரிஸ்ட் விருப்பட்டார்.

gilly

அப்போது அவருக்கு 20 வயது இருக்கும் 2007 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான பின்னர் மூன்று ஆண்டுகள் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். சர்வதேச கிரிக்கெட்டை துவங்கிய இரண்டு ஆண்டுகள் தான் இருக்கும். அப்போதே அவர் அணியில் உள்ள வீரர்களின் திறனை பற்றி சில கருத்துக்களைக் கூறுவது மட்டுமன்றி போட்டிகளுக்கும் சில திட்டங்களை வகுத்துக் கொடுப்பார்.

இதையும் படிங்க : விராட் கோலி ஒரு நல்ல கேப்டன்னு சொல்ல இந்த ஒரு விஷயம் போதும் – சல்மான் பட் கருத்து

மேலும் எதிரணி வீரர்களின் பலம், பலவீனங்கள் ஆகியவற்றைப் பற்றியும் பேசுவார். அதோடு போட்டியின் தன்மையையும் தெரளிவாக புரிந்து வைத்திருந்தார். இப்படி ஆட்டத்தை பற்றிய தெளிவு மற்றும் புரிதல் அவருக்கு சிறப்பாக இருந்ததாலேயே அவரிடம் கேப்டன்சி இருந்ததை கில்க்ரிஸ்ட் கண்டறிந்தார். அதன் பின்னர் கில்க்ரிஸ்ட் வெளியேறினால் டெக்கான் அணிக்கு ரோஹித் தான் கேப்டன் என்று கூறப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு மும்பை அணி அவரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement