விராட் கோலி ஒரு நல்ல கேப்டன்னு சொல்ல இந்த ஒரு விஷயம் போதும் – சல்மான் பட் கருத்து

Butt
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவரது இந்த பதவி நீக்கம் குறித்து பல்வேறு கருத்துக்களையும் பல்வேறு முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் கோலியின் ரசிகர்கள் அவரை விட்டுக் கொடுக்காமல் தொடர்ச்சியாக ஆதரவு தந்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் மட்டும் தற்போது கோலியின் கேப்டன்சியை ஆதரித்து ஒரு கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.

kohli

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி ஒரு நல்ல கேப்டனாகவே இந்திய அணிக்கு செயல்பட்டு வருகிறார். அவர் அணியை வழிநடத்தும் விதம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை லாவகமாக கையாண்டு வருகிறார். அவர் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபிக்கும் வகையில் பல விடயங்களை செய்துள்ளார்.

அதன்படி தற்போது கூட சிறப்பான பார்ம் இன்றி தவித்து வரும் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை ஆதரித்து அவர் வாய்ப்புகளை வழங்கி வருகிறார். நடைபெற்று முடிந்த நியூசிலாந்து தொடரில் கூட அவர்கள் இருவரும் சோபிக்க தவறியிருந்தாலும் தென் ஆப்ரிக்க தொடரில் அவர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து நெருக்கடியான நேரத்திலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

rahane

அவரது இந்த ஆதரவு பாராட்டுக்குரிய ஒன்று. ஒரு சில வீரர்கள் மோசமாக செயல்படும் போது அவர்களைப் புறக்கணிக்கவே அனைவரும் முயற்சி செய்வார்கள். ஆனால் அப்படி மோசமான பார்மில் இருக்கும் வீரர்களுக்கு ஆறுதலாகவும் பக்கபலமாகவும் இருப்பதே விராட் கோலியின் சிறந்த கேப்டன்சியை வெளிக்காட்டுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியால் முடியாத இந்த ஒரு விஷயத்தை சொல்லித்தான் அவரை தூக்கியிருப்பாங்க – சபா கரீம் ஓபன்டாக்

கோலியின் தலைமையில் உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் அணியாக இந்திய அணி வலம் வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று சல்மான் பட் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், மாயங்க் அகர்வால் போன்ற வீரர்களின் வருகையால் ரஹானே மற்றும் புஜாராவின் இடம் தற்போது பெரிய அழுத்தத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement