விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இவருக்கும் கேப்டன்சியில ஒரே இலக்கு தான் – ரவி சாஸ்திரி பேட்டி

Shastri
- Advertisement -

இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி பதவி விலகியதை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது டெஸ்ட் தொடருக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்றும் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

Rohith

- Advertisement -

இதன் காரணமாக பி.சி.சி.ஐ மற்றும் கோலிக்கு இடையே மோதல் என்றெல்லாம் கூட சர்ச்சை கிளம்பி இருந்தது. இந்நிலையில் இப்படி ஒரு இக்கட்டான வேளையில் பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா குறித்தும் விராட் கோலி குறித்தும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலியுடன் நான் நீண்ட நாட்களாக பயணித்து உள்ளேன். அதேபோன்று ரோகித் சர்மா விடமும் அதிகமாக கலந்துரையாடி உள்ளேன். என்னை பொருத்தவரை இருவரின் கேப்டன்சியிலும் சில வித்தியாசங்கள் உண்டு. விராட்கோலி கபில்தேவ் போன்று கேப்டன்சி செய்யக்கூடியவர். அவரது கேப்டன்சி-யில் ஆக்ரோஷமும், தைரியமும் அதிகமாக இருக்கும்.

rohith

ஆனால் ரோகித் சர்மாவின் கேப்டன்சி சுனில் கவாஸ்கர் போன்றது. அதில் நிதானமும், தொலைநோக்குப் பார்வையும் இருக்கும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் இருவரது கேப்டன்சியின் நோக்கம் குறித்து தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : கோல்டன் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய புஜாராவை பார்த்து டிராவிட் என்ன செய்தார் தெரியுமா?

ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் கோலியாக இருந்தாலும் சரி, ரோகித்தாக இருந்தாலும் சரி இருவருமே போட்டியை நல்ல முறையில் அணுக கூடியவர்கள். அவர்கள் இருவரின் இலக்கு மற்றும் சிந்தனை எல்லாம் வெற்றி மட்டுமே தான் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement