கோல்டன் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய புஜாராவை பார்த்து டிராவிட் என்ன செய்தார் தெரியுமா?

Pujara
- Advertisement -

பாக்சிங் டே போட்டியாக நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், டீன் எல்கர் தலைமையிலான தென் ஆபிரிக்க அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி துவக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது சிறப்பான துவக்கத்தை அளித்தது.

நிதானமாக விளையாடி வந்த மாயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து மூன்றாவது வீரராக புஜாரா களம் இறங்கினார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காமல் விளையாடி வரும் புஜாரா இந்த தொடரிலும் சொதப்பும் பட்சத்தில் அவர் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற அழுத்தமான சூழ்நிலைக்கு மத்தியில் களம் இறங்கினார்.

- Advertisement -

அப்படி தான் சந்தித்த முதல் பந்திலேயே லுங்கி நெகிடியின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாரா அடையும் இரண்டாவது கோல்டன் டக் இதுவாகும். அதை தொடர்ந்து நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்து இருந்தது. இந்நிலையில் கோல்டன் டக் அவுட்டாகி புஜாரா வெளியேறிய பின்னர் அவருக்கு பெவிலியனில் இருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த வரவேற்பு தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

அதன்படி புஜாரா ஆட்டமிழந்து வெளியேறியதும் நேராக ஓய்வறைக்கு சென்று தனது உடைகளை கலைத்துவிட்டு வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தார். அதனை கவனித்த ராகுல் டிராவிட் எழுந்து சென்று அவரிடம் இதெல்லாம் ஆட்டத்தில் நடக்கக்கூடிய ஒன்றுதான் கவலைப்படாதே என்பது போல அவரது தோளில் தட்டிக்கொடுத்து சிரித்தபடி சென்றார். அதனை எதிர்பாராத புஜாராவும் டிராவிடை நோக்கி சிரித்தபடி போட்டியை காண வந்து அமர்ந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் : ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டம் – காரணம் இதுதான்

புஜாராவின் மீது கோபத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த வேளையில் டிராவிட் அவரை மகிழ்ச்சியுடன் ஆதரித்து வரவேற்றது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த விடயம் தற்போது வீடியோவாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement