டி20 வேர்ல்டுகப்புக்கு முன்னாடி பாண்டியாவை விளையாட வைக்காதீங்க – ரவி சாஸ்திரி தடாலடி

Shastri
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வந்ததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இருந்து விலகினார். மேலும் காயம் குணமடைந்த பின்னர் தன்னை அணியில் கிடைக்குமாறு அவர் இந்திய அணியின் நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்திருந்தார். இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங், பௌலிங் மற்றும் கேப்டன்சி என அனைத்து விதத்திலும் அசத்திய ஹர்திக் பாண்டியா முதல் சீசனில் குஜராத் அணியை சாம்பியன் பட்டம் வெல்லும் அளவிற்கும் கொண்டு சென்றுள்ளார்.

Pandya

- Advertisement -

இதன் காரணமாக அவர் மீது தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. அதுமட்டுமின்றி அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்த அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் அவர் முக்கிய வீரராக செயல்படுவார் என்றும் தெரிகிறது. இந்நிலையில் எதிர்வரும் உலகக் கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Hardik Pandya GT Vs RR

ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது நல்ல விடயம். அவர் இரண்டு ஓவர் கூட வீச முடியாத அளவிற்கு மோசமான காயம் அடைந்ததாக நான் நினைக்கவில்லை. எனவே இனிவரும் போட்டிகளில் நிச்சயம் அவர் பந்து வீசுவார். எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் அவருக்கு போதுமான ஓய்வு அளிக்க வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அவர் 20 ஓவர்கள் போட்டியில் மட்டுமே விளையாட வேண்டும். மற்ற வகையான கிரிக்கெட்டில் பாண்டியாவை விளையாட வைக்க கூடாது. சரியான ஓய்வு மற்றும் பயிற்சி ஆகியவை அவருக்கு இருக்கும் பட்சத்தில் டி20 உலக கோப்பை தொடரில் பாண்டியா சிறப்பாக செயல்படுவார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க குஜராத் தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியல்

பேட்ஸ்மேனாக மட்டுமே அவர் விளையாடினால் முதல் நான்கு அல்லது ஐந்து இடத்திற்குள் பாண்டியாவை களமிறக்க வேண்டும். ஆல்-ரவுண்டராக களமிறங்கினால் 5,6 ஆகிய இடங்களில் அவர் களமிறங்க வேண்டும். டி20 உலககோப்பை கிரிக்கெட்டில் நிச்சயம் பாண்டியா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement