விராட் கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் – மனம்திறந்த ரவி சாஸ்திரி

Shastri
Advertisement

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் தலைமையின் கீழ் சிறப்பாகவே நமது அணி செயல்பட்டு இருந்தாலும் ஐசிசி தொடர்களை கைப்பற்றாதது அவரது பதவி காலத்தில் மிக முக்கியமான குறையாக பார்க்கப்பட்டது. அதேவேளையில் கேப்டன் விராட் கோலியும் ரவி சாஸ்திரியும் இணைந்து மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வந்த போதிலும் அவர்களால் இணைந்து ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லையே என்ற ஒரு விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வந்தது.

Ravi

இந்நிலையில் அண்மையில் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரோடு டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலியும், பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரியும் விலகினர். அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர விரும்புவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் அண்மையில் வெளியான அறிவிப்பின்படி ஒருநாள் கிரிக்கெட்க்கும் ரோஹித் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இந்நிலையில் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் ரவிசாஸ்திரி தற்போது முதல்முறையாக இந்த விடயம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோஹித் மற்றும் கோலிக்கு கிடைத்துள்ள ஒரு ஆசீர்வாதமாக இந்த முடிவினை நான் பார்க்கிறேன்.

shastri 1

ஏனெனில் தற்போதைய சூழலில் பயோ பபுளுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு வீரர் மூன்று விதமான அணியையும் கையாள்வது மிகவும் கடினம். இதன் காரணமாக இனி வரும் போட்டிகளில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கேப்டனாக செயல்படுவதால் அவரது ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்த முடியும். அதோடு அவர் மீண்டும் சிறப்பான பார்முக்கு திரும்பவும் இது வழிவகுக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரை விராட் கோலி விரும்பும் வரை கேப்டன் பதவியை தொடர்ந்து செய்யலாம்
.
இதையும் படிங்க : சேவாக் கம்பீர் சாதனைக்கு அருகில் வந்து தவறவிட்ட ராகுல் அகர்வால் ஜோடி – விவரம் இதோ

என்னை பொருத்தவரை தற்போது விராட் கோலிக்கு கிடைத்துள்ள இந்த நேரம் அவரை ஆற அமர சிந்திக்க வைக்கும். எப்படியும் என்னை பொறுத்தவரை விராட் கோலி அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை நிச்சயமாக கிரிக்கெட் விளையாடுவார். அவரிடம் அந்த அளவிற்கு உடல் திறன் உள்ளது என்று ரவி சாஸ்திரி வெளிப்படையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement