சேவாக் கம்பீர் சாதனைக்கு அருகில் வந்து தவறவிட்ட ராகுல் அகர்வால் ஜோடி – விவரம் இதோ

agarwal-1
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை இன்று விளையாடியது. இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்துள்ளது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் ராகுல் ஆட்டமிழக்காமல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Agarwal

துவக்க வீரரான அகர்வால் 60 ரன்களும், விராட் கோலி 35 ரன்களும், புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர்களான அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோரது ஜோடி தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து சாதனை புரிந்தது.

- Advertisement -

அதோடு சேவாக் மற்றும் கம்பீர் ஆகியோரது சாதனைக்கு மிக நெருக்கத்தில் சென்று தவறவிட்டது. அதன்படி இதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக வசிம் ஜாபர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு கடந்த 2006-2007 ஆம் ஆண்டு கேப்டவுனில் நடந்த போட்டியில் 153 ரன்கள் சேர்த்திருந்தனர்.

rahul

அதற்கடுத்து கம்பீர் மற்றும் சேவாக் ஆகியோரது ஜோடி 2011ஆம் ஆண்டு இதே செஞ்சூரியன் மைதானத்தில் 137 ரன்கள் குவித்து இருந்தது. இந்நிலையில் இன்று அந்த சாதனையை கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி 117 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தனர்.

இதையும் படிங்க : விஜய் ஹசாரே பைனல் : 50 ஓவர்கள் முடியும் முன்னரே தமிழ்நாடு தோற்றதாக அறிவிப்பு – ஷாக்கிங் பினிஷ்

அகர்வால் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் நிலைத்து நின்று ஆடிய ராகுல் இன்று முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை விக்கெட்டை இழக்காமல் 122 ரன்கள் அடித்து களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஆசியக் கண்டத்திற்கு வெளியே அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சதமடித்து அசத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement