விஜய் ஹசாரே பைனல் : 50 ஓவர்கள் முடியும் முன்னரே தமிழ்நாடு தோற்றதாக அறிவிப்பு – ஷாக்கிங் பினிஷ்

tn
- Advertisement -

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த விஜய் ஹசாரே தொடரானது இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் ஜெய்ப்பூரில் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இமாச்சலப் பிரதேச அணியானது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய தமிழ்நாடு அணி தங்களது இன்னிங்சில் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அளவில் தடுமாறியது. 40 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஜெகதீசன், அபாரஜித், சாய் கிஷோர், முருகன் அஸ்வின் என வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேற தமிழ்நாடு அணி முழு 50 ஓவர்களை விளையாடுமா? என்று எண்ணத்தோன்றிய அளவிற்கு நிலை இருந்தது.

rishi

- Advertisement -

அதன் பின்னர் தினேஷ் கார்த்திக் மற்றும் இந்திரஜித் ஆகியோர் துவக்கத்தில் நிதானமான பாட்னர்ஷிப் அமைத்து அதன் பின்னர் ரன் மழை பொழிய ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. தினேஷ் கார்த்திக் முக்கியமான இந்த போட்டியில் தனது அனுபவத்தை வெளிக்கொணர்ந்து 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அதேபோன்று இந்திரஜித்தும் 80 ரன்களில் ஆட்டமிழக்க இறுதி நேரத்தில் ஷாருக்கான் வழக்கம்போல தனது அதிரடியால் வெளுத்து வாங்கினார். 21 பந்துகளை சந்தித்த அவர் 42 ரன்களும், விஜய்சங்கர் 16 பந்துகளில் 22 ரன்கள் குவிக்க தமிழ்நாடு அணியானது இறுதியில் 49.4 ஓவர்களில் 314 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை துரத்திய இமாச்சல பிரதேச வீரர்கள் நிச்சயம் அடிக்க முடியாது என்று நம்மில் பலரும் யோசித்திருப்போம். ஆனால் சிறப்பாக விளையாடிய அந்த அணியின் துவக்க வீரர் அரோரா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 136 ரன்கள் குவித்தார். ரிஷி தவான் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆனால் போட்டி முடியும் முன்னரே 47வது ஓவரின் 3-வது பந்தில் இமாச்சலப் பிரதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்களில் இருந்த போது இமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

hp

வெற்றிக்கு இன்னும் 15 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலை இருக்கும் போதே ஆட்டம் முடிவுக்கு வந்தது அனைவரையும் அதிர வைத்தது. இதற்கு காரணம் யாதெனில் போட்டி நடக்க போதிய வெளிச்சம் இல்லை என்கிற காரணத்தால் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது என்று அம்பயர்கள் அறிவித்தனர். மேலும் 15 பந்துகளில் 16 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் VJD முறைப்படி இமாச்சல பிரதேசம் 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது என்று குறிப்பிட்டு அவர்களை வெற்றியாளராக அறிவித்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க : வாழ்க்கையில இரண்டே முறை தான் இப்படி புஜாரா அவுட் ஆகியிருக்காரு. அதுவும் ஒரே ஆள்கிட்ட – விவரம் இதோ

இதன் காரணமாக தமிழ்நாடு அணி பரிதாப தோல்வியை சந்தித்து கோப்பையை தவறவிட்டது. கடைசி நேரத்தில் தமிழ்நாடு அணி சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பந்து வீசுகிறோம் என்று கூறியும் போதிய வெளிச்சம் இல்லை என்று அம்பயர்கள் அனுமதிக்காமல் இமாச்சலப் பிரதேச அணியை வெற்றியாளராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement