வாழ்க்கையில இரண்டே முறை தான் இப்படி புஜாரா அவுட் ஆகியிருக்காரு. அதுவும் ஒரே ஆள்கிட்ட – விவரம் இதோ

pujara
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி தற்போது செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அதன்படி தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாலும் இந்திய அணி சிறப்பான துவக்கத்தினை பெற்றது.

pujara 1

- Advertisement -

முதல் விக்கெட்டுக்கு ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோரது ஜோடி 117 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைக்க அடுத்து வந்த புஜாரா சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறிய அடுத்த பந்திலேயே புஜாரா லுங்கி நெகிடியின் பந்துவீச்சில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 100 போட்டிகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் நெருங்கிக்கொண்டிருக்கும் புஜாரா இன்று ஒரு மோசமான நிகழ்வை இன்று சந்தித்துள்ளார். அதன்படி இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இரண்டு முறை மட்டுமே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.

pujara 2

அதாவது தான் சந்தித்த முதல் பந்திலேயே இருமுறை மட்டுமே அவர் ஆட்டம் இழந்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் இந்த இருமுறையும் அவரை ஆட்டமிழக்க வைத்தது லுங்கி நெகிடி தான். கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது லுங்கி நெகிடியால் ரன் அவுட் செய்யப்பட்டு புஜாரா முதன்முறை கோல்டன் டக் அவுட் ஆனார்.

- Advertisement -

இதையும் படிங்க : கடந்த 12 வருடங்களில் இதுவே முதல்முறை. தெ.ஆ வச்சி செய்யும் இந்திய ஓப்பனர்கள் – விவரம் இதோ

அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டியில் நெகிடி பந்துவீச்சில் முதல் பந்திலேயே அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இப்படி இவர் 2 முறை கோல்டன் டக் அவுட் ஆகும்போதும் அவர் விக்கெட் விழ காரணமாக இருந்தது லுங்கி நெகிடிதான் என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

Advertisement