கடந்த 12 வருடங்களில் இதுவே முதல்முறை. தெ.ஆ வச்சி செய்யும் இந்திய ஓப்பனர்கள் – விவரம் இதோ

Agarwal
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வென்று வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணியானது தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. துவக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

rahul

- Advertisement -

இதுவரை 40 ஓவர்கள் விளையாடியுள்ள வரையில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 113 ரன்களை குவித்துள்ளது. அகர்வால் அரைசதம் கடந்தும், ராகுல் அரைசதத்தை நெருங்கியும் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியின் முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி 100 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்து தற்போது விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் துவக்க வீரர்களான ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோரது ஜோடி செஞ்சூரியன் மைதானத்தில் 12 ஆண்டுகால சாதனையை தற்போது முறியடித்துள்ளது. அதன்படி வேகப்பந்து வீச்சுக்கு முழுக்க முழுக்க சாதகமாக இருக்கும் இந்த செஞ்சூரியன் மைதானத்தில் துவக்க வீரர்கள் 20 ஓவர்களுக்கு மேல் நிற்பது கடினம். கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து இந்திய வீரர்கள் ஆசியாவிற்கு வெளியே 20 ஓவர்களுக்கு மேல் விக்கெட் இழப்பின்றி நிற்பது இது 16வது முறை.

rahul 1

ஆனால் இந்த செஞ்சூரியன் மைதானத்தில் துவக்க வீரர்கள் விக்கெட் இழப்பின்றி முதல் 20 ஓவர்களை தாண்டியது கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. அந்த அளவு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்திய துவக்க வீரர்கள் தங்களது அசாத்தியமான பேட்டிங் திறமையை வெளிக்கொண்டு வந்து விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் : போட்டிக்கு முன் 2 நிமிட மவுன அஞ்சலி. கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள் – காரணம் என்ன?

தற்போது 2 ஆவது செஷன் வரை ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி சிறப்பாக நிலைத்து நின்று விளையாடி வருகிறது. ஏற்கனவே கர்நாடக அணி மற்றும் ஐ.பி.எல் அணிக்காக ஒன்றாக விளையாடி வந்த ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி தற்போது இந்திய டெஸ்ட் அணியிலும் சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சியே.

Advertisement