முதல் டெஸ்ட் : போட்டிக்கு முன் 2 நிமிட மவுன அஞ்சலி. கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள் – காரணம் என்ன?

RSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்ததன் காரணமாக தற்போது இந்திய அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பிறகு இரு அணி வீரர்களும் மைதானத்தில் தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்னதாக இரண்டு நிமிடம் மௌனமாக இருந்தனர்.

INDvsRSA

- Advertisement -

அதுமட்டுமின்றி தற்போது தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து இந்த போட்டியில் விளையாடி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது குறித்த பதிலைத்தான் நாங்கள் இந்த பதிவில் உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

அதன்படி இந்த போட்டிக்கு முன்னர் இரு அணி வீரர்களும் மௌனமாக நிற்கவும், தென்ஆப்பிரிக்க வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடவும் ஒரே காரணம் தானாம். அதன்படி வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டதாவது : தென்னாப்பிரிக்க நாட்டில் இன்று மறைந்த 90 வயது தேஸ்மான்ட் டூடு என்பவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலேயே இந்த மரியாதை செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படி இரு தேசிய அணிகளும் மரியாதை செலுத்தும் தேஸ்மான்ட் டூடு யார் என்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

desmond tutu

90 வயதான தேஸ்மான்ட் டூடு கறுப்பின மக்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை கண்டித்து அதற்கு எதிராக போராடிய ஒரு சமூகப் போராளி. அதுமட்டுமின்றி 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றுள்ளார். அதோடு தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் பிஷப்பாக பணியாற்றியுள்ள இவர் நெல்சன் மண்டேலாவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியுள்ள இளம்வீரரை அறிமுக வீரராக களமிறக்கிய தெ.ஆ அணி – யார் இவர்?

இப்படி மக்களுக்காக பணியாற்றி மக்களிடமும் நல்ல பெயர் பெற்று இருந்ததால் தென் ஆப்பிரிக்க நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட தேஸ்மான்ட் டூடு தனது 90-வது வயதில் இன்று மரணமடைந்துள்ளதால் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவே தென் ஆப்பிரிக்க கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement