மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியுள்ள இளம்வீரரை அறிமுக வீரராக களமிறக்கிய தெ.ஆ அணி – யார் இவர்?

Jansen
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியானது செஞ்சூரியன் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பேசிய விராத் கோலிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் அந்த அணி சார்பாக 21 வயதான மார்கோ யான்சென் என்பவர் அறிமுக வீரராக களம் இறங்குகிறார் என்று அறிவித்தார்.

jansen 2

- Advertisement -

அவரது இந்த அறிவிப்புக்குப் பின்னர் மார்கோ யான்சென் குறித்த தேடல் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அவர் குறித்த சில சுவாரஸ்யமான விவரங்களை நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி 21 வயதான மார்கோ யான்சென் தென் ஆப்பிரிக்க ஏ அணிக்காக விளையாடி வருபவர். அண்மையில் இந்திய ஏ அணி அங்கு சென்றபோது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதை தவிர்த்து அவர் குறித்த சில சுவாரசியமான விடயங்களும் இருக்கின்றன. தனது இளம் வயதில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆரம்பித்த யான்சென் டி20 கிரிக்கெட்டில் 164 ரன்களை அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் அடித்துள்ளார். பிறகு தன்னை வேகப்பந்து வீச்சாளராக தகவமைத்து கொண்டு அவர் தொடர்ச்சியாக தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார்.

jansen 1

அதன் பிறகு கடந்த ஆண்டு இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடருக்கு முன்னர் மும்பை அணியால் கவனம் ஈர்க்கப்பட்ட மார்கோ யான்சென் அவர்களின் பயிற்சிக்கு அழைக்கப்பட்டு இந்தியா வந்து மும்பை அணியால் பயிற்சி பெற்றார். பின்னர் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மும்பை அணியிலும் தேர்வாகி ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இதுவரை யாரும் எடுக்காத முடிவை தைரியமாக கையில் எடுத்த விராட் கோலி – டாசிற்க்கு பிறகு பேசியது என்ன?

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஏ.பி.டி-க்கு எதிராக சிறப்பாக பந்து வீசி அசரவைத்தார். அதேபோன்று சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை மைதானத்திலும் இவர் தனது வேகம் மற்றும் பவுன்சர்களால் அசத்தினார். இவரிடம் உள்ள திறமையை கண்ட தென்னாப்பிரிக்க நிர்வாகம் தற்போது அவரை டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராக இந்த பாக்ஸிங் டே போட்டியில் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement