இதுவரை யாரும் எடுக்காத முடிவை தைரியமாக கையில் எடுத்த விராட் கோலி – டாசிற்க்கு பிறகு பேசியது என்ன?

INDvsRSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததால் தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின்போது டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி தைரியமாக தாங்கள் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

kohli

- Advertisement -

அவரின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனெனில் யாரும் இதுவரை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் தென்ஆப்பிரிக்க மைதானத்தில் வெளிநாட்டு அணியாக சென்று முதலில் பேட்டிங் செய்தது கிடையாது. ஏனெனில் முழுக்க முழுக்க தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் அந்த மைதானங்களில் முதலில் பவுலிங் செய்யவே விருப்பப்படும்.

ஆனால் அதையெல்லாம் உடைத்தெறியும் வகையில் வெளிநாட்டு மைதானமாக இருந்தாலும் பரவாயில்லை என்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று விராட் கோலி அறிவித்தார். அதனை தொடர்ந்து டாசிற்கு பிறகு பேசிய கோலி கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். எப்போதுமே ஸ்கோர் போர்டில் ரன்கள் இருக்கும் போது அது நமக்கு கூடுதல் பலம் தான்.

Kohli

என்னை பொறுத்தவரை இந்த மைதானம் முதல் நாளில் சற்று ஸ்லோவாக இருக்கும். அதன் பிறகு இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் தான் இன்னும் வேகமாக என்று கருதுகிறேன். வெளிநாட்டில் நாங்கள் எப்போதுமே சவால்களை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறோம். அந்த வகையில் இந்த பலம்வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் எங்களால் சிறப்பாக விளையாட முடியும் என்று விராட் கோலி கூறி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் : டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங். பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

டாஸ் வென்று விராட் கோலி முதலில் பேட்டிங் செய்கிறோம் என்று தெரிவித்தது அடுத்து பலரும் கோழியின் இந்த முடிவு தைரியமான ஒன்று என்று தங்களது பாராட்டுக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement