முதல் டெஸ்ட் : டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங். பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. சில நிமிடங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாட தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பதே பெரிய விவாதமாக கடந்த சில நாட்களாக இருந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசினார்.

- Advertisement -

அதன்படி இந்திய அணியில் 5 பந்துவீச்சாளர்கள் மற்றும் 6 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குவதாக அறிவித்தார். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை சிராஜ், ஷமி, பும்ரா, அஷ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விளையாடுவதாக அறிவித்தார். பேட்டிங் வரிசையை பொருத்தவரை அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் அகர்வால் இடம்பெற்றுள்ளனர். மற்றபடி கேப்டன் விராட் கோலியும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆகிய 6 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்த முதல் போட்டியில் இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயருக்கும், விஹாரிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : கவலையே பட வேணாம். கோலி தெ.ஆ தொடரில் நிச்சயம் இதை செய்வார் – சிறுவயது பயிற்சியாளர் பேட்டி

1) கே.எல் ராகுல், 2) மாயங்க் அகர்வால், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) ரிஷப் பண்ட், 7) ஷர்துல் தாகூர், 8) அஷ்வின், 9) ஷமி, 10) பும்ரா, 11) சிராஜ்

Advertisement