கேப்டனாக கோலி எல்லாமே சாதிச்சுட்டார்! இனி அவரோட இதுக்காக மட்டும் தான் – ரவி சாஸ்திரி கருத்து

shastri
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக 68 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள அவர் 40 வெற்றிகளை குவித்துள்ளார். இதன் வாயிலாக ஒட்டுமொத்த உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கிரேம் ஸ்மித், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோருக்குப் பின் 4-வது வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக அவர் சாதனையும் படைத்துள்ளார்.

kohli

- Advertisement -

பணிச்சுமை:
சச்சினுக்கு பின் இந்தியாவின் ரன் மெஷின் என அழைக்கப்படும் இவர் ஏற்கனவே பல ஆயிரம் ரன்களைக் குவித்து ஒரு மகத்தான பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்தவர். இருப்பினும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டதன் காரணமாக பணிச்சுமை அதிகமான பணிச்சுமைக்கு உள்ளான அவர் கடந்த 2019 க்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.

இதற்கு முடிவுக்கு கட்டும் வண்ணம் சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதை சாதகமாக பயன்படுத்திய பிசிசிஐ அவரின் ஒருநாள் கேப்டன் பதவியையும் பறித்தது.

kohli 1

எல்லாம் சாதிச்சுட்டாரு:
அதில் ஏற்பட்ட விரக்தி காரணமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்துள்ளார் என கருதப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி கேப்டனாக அனைத்தையும் சாதித்து விட்டதாக சமீபத்தில் ஓய்வு பெற்ற பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலியின் ஓய்வு முடிவு பற்றி இன்று அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
“மிகவும் ஆக்ரோஷமான வெற்றிகரமான கேப்டனாக இருந்த விராட் கோலி தலை நிமிர்ந்து நடக்கலாம். கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா கண்ட ஒரு மகத்தானவராக அவர் அறியப்படுவார். எப்போதும் வலுவான எண்ணங்களை கொண்டவராக இருக்கும் அவர் தனது கேப்டன்ஷிப் மற்றும் வேலையில் அர்ப்பணிப்போடு செயல்படகூடியவர்” என கூறிய ரவிசாஸ்திரி வரலாற்றில் விராட் கோலி ஒரு வெற்றிகரமான ஆக்ரோசம் நிறைந்த கேப்டனாக என்றும் ஜொலிப்பார் என தெரிவித்தார்.

kohli

பேட்டிங்கில் கவனம்:
“கபில் தேவ் மற்றும் எம்எஸ் தோனி ஆகிய 2 கேப்டன்கள் மட்டுமே இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர்கள். வெறும் 2 தருணங்களில் மட்டுமே கேப்டனாக விராட் கோலி விரக்தி அடைந்திருப்பார், ஒன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றொன்று தற்போது நடந்து முடிந்த தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர். மேலும் கேப்டனாக அவர் அனைத்தையும் சாதித்து விட்டார் என்பதால் இனி பேட்டிங்கில் கவனம் செலுத்த நேரம் வந்துவிட்டது”

- Advertisement -

என இது பற்றி மேலும் தெரிவித்த ரவி சாஸ்திரி ஐசிசி உலக கோப்பையை விராட் கோலி வெல்லவிட்டாலும் கேப்டனாக அனைத்தையும் சாதித்துள்ளார் என பெருமையாக கூறினார். அத்துடன் கடந்த 2 வருடங்களாக பேட்டிங்கில் பார்ம் இல்லாமல் தவித்து வரும் அவர் இனி பேட்டிங்கில் கவனம் செலுத்தி ரன்கள் குவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : பெருமையாக உள்ளது ஆனால்! விராட் கோலி கேப்டன்ஷிப் விலகல் குறித்து – அனுஷ்கா சர்மா உருக்கமான கருத்து

அவர் கூறுவது போல இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்ததால் விராட் கோலிக்கு பணிச்சுமை ஏற்பட்டதுடன் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற விமர்சனமும் இருந்தது. அது அவரின் பேட்டிங்கை பாதித்ததுள்ளதை தெளிவாக பார்த்தோம். ஆனால் தற்போது கேப்டன் பதவியில் இருந்து மொத்தமாக விலகியுள்ளதால் இனி சுதந்திரப் பறவையாக அவரால் பேட்டிங் செய்து ரன்களை குவிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement