- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அபிஷேக் சர்மா டி20 உலககோப்பையில் சறுக்க என்ன காரணம்? என்பது குறித்து – ரவி சாஸ்திரி கருத்து

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா கடந்த ஓராண்டாக கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்ற அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் அதிக ரன்களை குவிப்பர் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

அபிஷேக் சர்மாவின் தடுமாற்றம் குறித்து பேசிய : ரவி சாஸ்திரி

ஆனால் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறியிருந்தார். அதன்பிறகு நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக தவறவிட்டார். பின்னர் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிக்கு மீண்டும் முழு உடற்தகுதி பெற்று அணிக்கு திரும்பி விளையாடியிருந்தார்.

- Advertisement -

ஆனால் இம்முறையும் 4 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் மீண்டும் ஒருமுறை ரன் எடுக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார். அவரது இந்த செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் திறமை வாய்ந்த வீரரான அவர் நிச்சயம் இனிவரும் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்கிற ஆதரவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தடுமாற்றமாக விளையாடி வருவது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மா தற்போது தனது பழைய ரிதத்தை பிடிக்க தடுமாறி வருகிறார். முதல் ஓவரிலேயே அடிக்க சென்று ஆட்டமிழந்து வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமே இந்தியா பாகிஸ்தான் போட்டியை அப்படி சொல்றதை நிறுத்துங்க – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தாக்கு

ஆனால் மீண்டும் அவர் தனது பழைய பார்மை மீட்டெடுக்க சிறிது நேரம் களத்தில் நின்றாலே போதும். அதாவது போட்டியின் சூழலையும், மைதானத்தின் சூழ்நிலையையும் கணக்கில் கொண்டு முதல் ஓவரில் சற்று நிதானமாக துவங்கினால் பின்னர் அவர் சந்தித்த டாட் பால்களை பிற்பாதியில் பவுண்டரியும், சிக்ஸர்களுமாக மாற்ற முடியும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

- Advertisement -