கொழும்பு நகரில் நடைபெற்ற நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய லீக் ஆட்டமான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி சூப்பர் 8 சுற்றிற்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
பாகிஸ்தான் அணியை தாக்கி பேசிய ஸ்ரீகாந்த் :
இந்த போட்டியில் இந்திய அணி எந்தவித சிரமமும் இன்றி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ள வேளையில் அதே அளவிற்கு பாகிஸ்தான் அணியின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்னாள் வீரர்கள் பலரும் முன்வைத்து வருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் வீரர்களே அந்த அணியை வசைபாடும் அளவிற்கு இந்த தோல்வி மிக மோசமான தோல்வியாக அமைந்தது.
இந்நிலையில் இனிமேல் வரும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை பரம எதிரிகளுக்கு இடையேயான போட்டி என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியை தாக்கும் வகையில் கடுமையான சில விமர்சனங்களை இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரிய பில்டப் கொடுக்கிறார்கள். ஆனால் களத்தில் நடப்பது வேறு இந்திய அணி எந்த ஒரு சிரமமும் இன்றி பாகிஸ்தான் அணியை வெகுஎளிதாக வீழ்த்தியுள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய பாகிஸ்தான் அணியை வீழ்த்த முதன்மை இந்திய அணி எல்லாம் தேவையே கிடையாது. நான்காவது லெவன் அல்லது சி அணியை அனுப்பினாலே பாகிஸ்தான் அணியை இந்திய அணி துவம்சம் செய்துவிடும்.
இதையும் படிங்க : பைனல்ல பாகிஸ்தான் அணிக்கெதிராக இந்திய அணி விளையாடக்கூடாது.. ஏன்னா? – காரணத்தை கூறிய அஷ்வின்
அந்த அளவிற்கு பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் ஜாம்பவான் வீரர்கள் நிறைந்த அந்த அணி இன்று படும் மோசமான வீரர்களை வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக நேற்று ஆடிய பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை மிக மோசமான ஒரு பேட்டிங் வரிசையாக இருந்தது என்றும் ஸ்ரீகாந்த் விமர்சித்திருந்தார்.



