என்னோட கேரியரில் அது தான் மகத்தான வெற்றி.. வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற சாஸ்திரி பேட்டி

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் சிறந்து விளங்கி இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருதுகளை கொடுத்து கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் 2019 – 2023 வரையிலான 4 வருடங்களில் அசத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு நேற்று மும்பையில் நடைபெற்ற விழாவில் பிசிசிஐ சார்பில் பல்வேறு விருதுகள் கொடுக்கப்பட்டன.

அதில் சிகே நாயுடு சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர் ஃபரூக் என்ஜினியர் வென்றார். அத்துடன் 1981இல் அறிமுகமாகி 1992 வரை இந்தியாவுக்காக 150 ஒருநாள் மற்றும் 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ரவி சாஸ்திரிக்கும் அந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

- Advertisement -

மறக்க முடியாத வெற்றி:
குறிப்பாக 1983 உலகக்கோப்பை வென்ற அணியில் முக்கிய அங்கமாக இருந்த ரவி சாஸ்திரி 1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வெல்வதற்கு தொடர்நாயகன் ஆடி கார் விருது வென்று முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது. அதை விட ஓய்வுக்கு பின்பு வர்னணையாளராக செயல்பட்டு வரும் அவர் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பை ஃபைனல்களில் இந்தியா கோப்பையை வென்ற போது வர்ணித்த தருணங்கள் இப்போதும் ரசிகர்கள் மனதில் நிற்கின்றன.

அது போக 2017 – 2021 வரையிலான காலகட்டங்களில் பயிற்சியாளராகவும் இருந்த அவர் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைப்பதற்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் உங்களுடைய கேரியரில் எது மறக்க முடியாத வெற்றி என்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய பின் தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே கேட்டார்.

- Advertisement -

அதற்கு 2021 காபா டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வென்றதே மகத்தான வெற்றி என ரவி சாஸ்திரி பதிலளித்தது பின்வருமாறு. “இந்த மாலை எனக்கு ஸ்பெஷலானது. சிறந்த வெற்றியை தேர்வு செய்வது கடினமாகும். இருப்பினும் அதை நான் விரைவாக செய்கிறேன். நீங்கள் காண்பித்தது போல் 1985இல் மெல்போர்னில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஃபைனல் ஸ்பெஷலானது”

இதையும் படிங்க: புஜாரா, சர்பராஸ் கான், ரிங்கு சிங்கை தாண்டி ரஜத் பட்டிதாருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்க – என்ன காரணம்?

“1983இல் இந்தியா உலகக் கோப்பையை வென்றதும் மறக்க முடியாது. அதே போல வர்ணனையாளராக 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை ஃபைனலில் தோனி சிக்ஸர் அடித்த தருணங்கள் சிறப்பானது. ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது மகத்தானது. ஆனால் அவை அனைத்தையும் விட காபாவில் கடைசி நாளில் ரிஷப் பண்ட் ஃபினிஷிங் செய்தது உச்சகட்ட வெற்றியாகும்” என்று கூறினார்.

Advertisement