புஜாரா, சர்பராஸ் கான், ரிங்கு சிங்கை தாண்டி ரஜத் பட்டிதாருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்க – என்ன காரணம்?

Rajat-patidar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இருந்து வெளியேறிய நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு பதிலாக மாற்றுவீரராக ரஜத் பட்டிதாரை இந்திய அணியின் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகிய விராட் கோலிக்கு பதிலாக எந்த வீரர் தேர்வாவார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த வேளையில் புஜாரா, சர்பராஸ் கான், ரிங்கு சிங் ஆகியோரை தாண்டி ரஜத் பட்டிதாருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்படி மத்திய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான ரஜத் பட்டிதாருக்கு ஏன் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது? அதற்கு என்ன காரணம்? என்ற கேள்வியும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதற்கு காரணமாக தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் ரஜத் பட்டிதார் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வானதற்கு முக்கிய காரணமே இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அவர் அடித்த இரண்டு சதங்கள் தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியா வந்திருந்த வேளையில் இந்திய ஏ அணிக்காக இடம் பிடித்திருந்த அவர் மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்களை அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

ஒரு ஆட்டத்தில் 111 ரன்களையும், மற்றொரு ஆட்டத்தில் 151 ரன்களையும் அடித்திருந்தார். இப்படி அவரது செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததாலே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு பதிலாக முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போகும் மாற்று வீரரை – அறிவித்த பி.சி.சி.ஐ

அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் 52 ரன்கள் சராசரியுடன் 315 ரன்கள் குவித்ததிருந்தார். அதுமட்டுமின்றி 104 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அதோடு ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 55 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 46 ரன்கள் சராசரி வைத்துள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

Advertisement