விராட் கோலிக்கு பதிலாக முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போகும் மாற்று வீரரை – அறிவித்த பி.சி.சி.ஐ

Patidar-and-Kohli
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக இரு அணிகளும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவடையும் முன்னர் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

மேலும் கோலியும் தன்னுடைய இந்த முடிவு குறித்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரிடம் கலந்து பேசிய பின்னரே முதல் இரண்டு போட்டியில் இருந்தும் விலகியதாகவும் கூறப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலிக்கு பதிலாக இந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் மாற்றுவீரராக இடம் பிடிக்கப்போவது யார்? என்று எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. மேலும் அவரது இடத்தில் களமிறங்க சில வீரர்களுக்கு இடையே கடுமையான போட்டியும் நிலவி வந்தது. இந்நிலையில் விராட் கோலிக்கு பதிலாக மத்தியப்பிரதேச அணியை சேர்ந்த ரஜத் பட்டிதார் இந்திய அணியில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : நாம இன்னும் கொஞ்சம் டைம் அவருக்கு தரனும்.. கண்டிப்பா அந்த பையன் நிறைய ரன் அடிப்பான் – ராகுல் டிராவிட் நம்பிக்கை

30 வயதான ரஜத் பட்டிதார் சமீபகாலமாகவே தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஒரே ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி இருக்கும் இவர் இவ்வேளையில் தற்போது டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement