நாம இன்னும் கொஞ்சம் டைம் அவருக்கு தரனும்.. கண்டிப்பா அந்த பையன் நிறைய ரன் அடிப்பான் – ராகுல் டிராவிட் நம்பிக்கை

Dravid-and-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க இருக்கிறது. இந்த இந்த போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கும் இரு அணி வீரர்களும் ஏற்கனவே ஹைதராபாத் சென்றடைந்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் 2 போட்டிகளில் இடம்பிடித்திருந்த முன்னணி வீரரான விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் இருந்து வெளியேறி உள்ளதால் அவரது இடத்தில் வாய்ப்பினை பெறப்போவது யார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது.

- Advertisement -

அதேவேளையில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு எவ்வாறு அமையப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மதத்திலும் அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகிய இருவர் மட்டுமே அனுபவ வீரர்கள்.

அவர்கள் இருவரை தவிர்த்து ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ் பரத் என அனைவருமே இளம் வீரர்கள். இதன் காரணமாக இந்திய அணி எப்படி விராட் கோலி இல்லாமல் இந்த தொடரை எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இளம் வீரரான சுப்மன் கில்லை ஆதரித்து சில கருத்துக்களை பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : சுப்மன் கில் ஒரு சிறந்த வீரர். அவர் தனது கிரிக்கெட் கரியரை அற்புதமாக துவங்கியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் நாம் அவருக்கு இன்னும் சில காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரம்ப நாட்களில் ஆஸ்திரேலியா போன்ற கடினமான இடங்களில் கில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சமீபத்தில் சவாலான மைதானங்களில் அவர் விளையாடியதாலே பெரிய அளவில் ரன்களை சேர்க்க முடியாமல் போனது.

இதையும் படிங்க : பிசிசிஐ விருதுகள் 2019 – 2023 : அஷ்வினுக்கு 2.. சாஸ்திரி முதல் கில் வரை விருது வென்றவர்களின் பட்டியல்

ஆனால் அவர் தனது பார்மிற்காக கடுமையாக உழைக்கிறார். அதோடு தன்னை மேம்படுத்திக்கொள்ள நேரத்தையும், முயற்சியையும் அவர் அளித்து வருகிறார். எனவே நிச்சயம் இந்த இங்கிலாந்து தொடரில் அவர் பெரிய அளவில் ரன்களை குவிப்பார் என ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement