தொடர் தோல்வியால் தடுமாறும் மும்பையை அவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் – ரவி சாஸ்திரி ஓபன் டாக்

MI - Ravi Shastri
- Advertisement -

கோலகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் முதல் வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. இந்த தொடரில் மார்ச் 3-ஆம் தேதியன்று 2 போட்டிகள் நடைபெற்று நிலையில் பகல் 3.30 மணிக்கு நடந்த 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் இந்த வருடத்தின் தொடர்ச்சியான 2-வது வெற்றியை பெற்று அசத்தியது.

buttler 1

- Advertisement -

முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 193/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய இங்கிலாந்தின் நட்சத்திரம் ஜோஸ் பட்லர் அதிரடி சரவெடியாக விளையாடி 68 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட ஐபிஎல் 2022 தொடரின் முதல் சதம் அடித்த வீரராக 100 ரன்கள் விளாசினார். மும்பை சார்பில் பந்துவீச்சில் கலக்கிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

மும்பை பரிதாப தோல்வி:
அதை தொடர்ந்து 194 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து வந்த இளம் வீரர் அன்மொல்பிரீட் சிங் 5 ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் இசான் கிசான் 43 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 54 ரன்கள் குவித்த நிலையில் முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார்.

Mi

அவருடன் வெறும் 33 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 61 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடிய இளம் வீரர் திலக் வர்மா முக்கியமான நேரத்தில் அவுட்டானார். அந்த நேரத்தில் அந்த அணி பெரிதும் நம்பியிருந்த நட்சத்திரங்கள் டிம் டேவிட் 1, டானியல் சம்ஸ் 0 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைரன் பொல்லார்ட் 22 ரன்களில் அவுட்டானர். இப்படி அந்த அணியின் முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 170/8 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதனால் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழும் மும்பை இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து திண்டாடி வருகிறது.

- Advertisement -

சூரியகுமார் யாதவ்:
இந்த 2 போட்டிகளிலுமே அந்த அணியின் முக்கிய வீரர் சூர்யகுமார் யாதவ் காயத்தால் பங்கேற்காதது மும்பையின் இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது காயத்தில் இருந்து குணமடைந்த அவர் டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில் 2-வது போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இன்னும் முழுமையாக உடல் தகுதியை எட்டாத காரணத்தால் நேற்றைய ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க முடியவில்லை.

sky 1

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் விளையாடினால் மட்டுமே மும்பை அணியால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது தடுமாறும் அவர்கள் அணியின் மிடில் ஆர்டரில் நிலைத்தன்மையும் பலமும் தேவைப்படுகிறது. அது சூரியகுமார் யாதவ் திரும்ப வந்தால் மட்டுமே மும்பை அணிக்கு கிடைக்கும்” என கூறினார்.

- Advertisement -

ஈடுகட்டும் திலக் வர்மா:
சூரியகுமார் யாதவ் இல்லாத இந்நிலையில் அவரின் இடத்தில் இளம் இந்திய வீரர் திலக் வர்மா விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் சூர்யகுமார் யாதவ் விளையாடும் 4-வது இடத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்துகளில் 3 பவுண்டரி உட்பட 22 ரன்கள் விளாசினார். அதேபோல் ராஜஸ்தானுக்கு எதிரான 2வது போட்டியில் 33 பந்துகளில் அதிரடியாக 61 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடினார்.

Shastri

இப்படி மும்பையின் அடுத்த நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ள அவரைப்பற்றி ரவிசாஸ்திரி பேட்டி பின்வருமாறு. “அவரின் பொறுமை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அவர் எதிரணியில் இருக்கும் மிகப்பெரிய நட்சத்திர வீரர்களை கண்டு அஞ்சவில்லை.

இதையும் படிங்க : அனுபவம் இல்லையென்றாலும் கேப்டனாக வெற்றிநடை போடும் ஹார்டிக் பாண்டியா – சொன்னதை செய்ஞ்சிட்டாரு

கடினமான சூழ்நிலையிலும் பொறுமையுடனும் நிதானத்துடனும் பேட்டிங் செய்யும் அவர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் குறிப்பாக இன் பிராண்ட் மற்றும் ஸ்வீப் பகுதியில் ரன்களை அடிக்க கூடியவராக உள்ளார். எனவே சூரியகுமார் யாதவ் இல்லாத நிலைமையில் தடுமாறும் மும்பைக்கு அவர்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளார்” என கூறினார்.

Advertisement