அனுபவம் இல்லையென்றாலும் கேப்டனாக வெற்றிநடை போடும் ஹார்டிக் பாண்டியா – சொன்னதை செய்ஞ்சிட்டாரு

Hardik Pandya
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 3-ஆம் தேதியன்று 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 10-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க வீரர் மேத்யூ வேட் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் 20 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

Shubamn Gill

- Advertisement -

இதனால் பவர்பிளே முடிவில் 44/2 என சுமாரான தொடக்கத்தைப் பெற்ற குஜராத் அணியை அதன் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் உடன் இணைந்து மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 3-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் 27 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 31 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார்.

சொல்லி அடித்த கில்:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக களத்தில் நின்று டெல்லி பவுலர்களை பந்தாடிய மற்றொரு இந்திய இளம் வீரர் சுமன் கில் ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களை குவித்து வந்தார். 17-வது ஓவர் வரை டெல்லி பவுலர்களை பந்தாடிய அவர் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்து வெறும் 46 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 84 ரன்களை 182.61 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் மில்லர் 15 பந்துகளில் 20* ரன்களும் ராகுல் டிவாடியா 8 பந்துகளில் 14 ரன்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த குஜராத் 171 ரன்கள் குவித்தது.

shami 2

டெல்லி சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் அசத்திய வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் இந்திய வீரர் கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதை தொடர்ந்து 172 என்ற நல்ல இலக்கை துரத்திய டெல்லிக்கு நியூசிலாந்தின் டிம் சைபர்ட் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க மற்றொரு இளம் இந்திய தொடக்க வீரர் பிரிதிவி ஷா 10 (7) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த இளம் வீரர் மந்தீப் சிங் 18 (16) ரன்களில் அவுட்டானதால் 34/3 என்ற மோசமான தொடக்கத்தை டெல்லி பெற்றது.

- Advertisement -

போராடிய பண்ட், வீழ்ந்த டெல்லி:
இதனால் ஏற்பட்ட சரிவில் இருந்து தனது அணியை மீட்டெடுக்க களமிறங்கிய டெல்லியின் அதிரடி வீரர் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாடி தனது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல போராடினார். ஆனால் அவருக்கு உறுதுணையாக வந்த இளம் வீரர் லலித் யாதவ் 22 பந்துகளில் 25 ரன்களும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரோவ்மன் போவெல் 12 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து பெரிய சப்போர்ட் கொடுக்காமல் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர்.

Lockie Ferguson

போதாக்குறைக்கு குஜராத் பவுலர்கள் அபாரமாக பந்துவீசியதன் காரணமாக டெல்லியின் வெற்றிக்காக 29 பந்துகளில் 7 பவுண்டரி உட்பட 43 ரன்கள் அடித்து போராடிக்கொண்டிருந்த ரிஷப் பண்ட் முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இந்திய ஆல்ரவுண்டர்கள் அக்சர் பட்டேல் 8 ரன்களிலும் சார்துல் தாக்கூர் 2 ரன்களிலும் அவுட்டாகி டெல்லியின் வெற்றிக்கு கைகொடுக்க தவறினார்கள். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேபிட்டல்ஸ் 157/9 ரன்களை மட்டுமே எடுத்த காரணத்தால் 14 ரன்கள் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியை குஜராத் டைட்டன்ஸ் பதிவு செய்தது.

- Advertisement -

மிரட்டும் பந்தியாவின் குஜராத்:
குஜராத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் 4 விக்கெட்டுகளையும் முகமது சமி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இந்த அற்புதமான வெற்றிக்கு பேட்டிங்கில் 84 ரன்கள் குவித்த சுப்மன் கில் உதவிய போதிலும் பந்துவீச்சில் 4 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை உறுதிசெய்த லாக்கி பெர்குசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் ஐபிஎல் 2022 தொடரில் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

gujarat titans

இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பலத்த பாராட்டுகளை பெற்று வருகிறார். ஏனெனில் இதற்கு முன்பாக ரஞ்சி கோப்பை, சயீத் முஷ்டாக் அலி கோப்பை உள்ளிட்ட எந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் அவருக்கு கிடையாது. எனவே அனுபவமில்லாத அவர் தலைமையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் தடுமாறும் என அனைவரும் நினைத்தனர்.

இதையும் படிங்க : ஆஸிக்கு சவுக்கு அடி கொடுத்து பாக் மானத்தை பாபர் அசாம்! அம்லா, கோலியை முந்தி புதிய உலகசாதனை

ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்டியா அனைத்து வீரர்களிடமும் சரியாக வேலை வாங்கி அடுத்தடுத்த வெற்றிகளுடன் குஜராத் அணியை இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளை மிரட்டும் ஒரு முக்கிய அணியாக வெற்றி நடை போட வைத்துள்ளார். அதோடு மட்டுமின்றி தான் ஏற்கனவே தோனி, கோலி, ரோஹித் ஆகியோரது கேப்டன்சியின் கீழ் விளையாடியுள்ளதால் நிச்சயம் அவர்களிடம் இருந்து கற்றுகொண்டதை வைத்து ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்படுவேன் என்று கூறியிருந்த வேளையில் தான் சொன்னதை முதல் இரண்டு போட்டிகளிலேயே செய்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement