ஆஸிக்கு சவுக்கு அடி கொடுத்து பாக் மானத்தை பாபர் அசாம்! அம்லா, கோலியை முந்தி புதிய உலகசாதனை

Pak vs Aus
- Advertisement -

பாகிஸ்தானுக்கு 24 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதலாவதாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து கோப்பையை வென்று சாதனை படைத்தது.

Pak Vs Aus 2022

- Advertisement -

சொந்த மண்ணில் சொந்த நாட்டு ரசிகர்களுக்கு முன்னிலையில் இந்த அவமானத்தை சந்தித்த பாகிஸ்தான் அதன்பின் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிந் முதல் போட்டியிலும் பரிதாப தோல்வி அடைந்து 1 – 0 என ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியது. அதை தொடர்ந்து நடைபெற்ற வாழ்வா சாவா 2-வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட பாகிஸ்தான் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 349 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

3-வது போட்டி:
இதனால் 1 – 1 என சமனில் இருந்த இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று லாகூரில் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானித்தை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 4 ரன்களில் அவுட்டானதால் 6/3 என படு மோசமான தொடக்கத்துடன் ஆரம்பத்திலே ஆஸ்திரேலியா திண்டாடியது.

aus vs pak

அந்த அளவுக்கு இந்த முக்கியமான போட்டியில் அதிரடியாக பந்துவீசிய பாகிஸ்தானுக்கு எதிராக நடுவரிசையில் பேன் டெக்மோர்ட் 36 ரன்களும் அலெஸ் கேரி அரை சதமடித்து 56 ரன்களும் சீன் அபோட் அதிரடியாக 40 பந்துகளில் 49 ரன்களும் எடுத்து ஓரளவு தாக்கு பிடித்தனர். இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை காட்டியதால் 41.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா வெறும் 210 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஹரிஷ் ரவூப் மற்றும் முகமத் வாசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

- Advertisement -

பாபர் அசாமின் சவுக்கு அடி:
அதை தொடர்ந்து 211 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர் பக்கர் ஜமான் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். ஆனால் அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தார். நேரம் செல்ல செல்ல நிதானத்தை கடைபிடித்து இந்த ஜோடியை கடைசி வரை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறிப் போய் நின்றார்கள்.

Babar Azam

மறுபுறம் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 190* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து வெற்றியை உறுதி செய்தது. இதில் 115 பந்துகளில் 12 பவுண்டரி உட்பட சதமடித்த பாபர் அசாம் 105* ரன்களும் 100 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட அரைசதம் அடித்த இமாம்-உல்-ஹக் 89* ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றி பெறச் செய்தனர். இவர்களின் அதிரடியால் 37.5 ஓவர்களில் 214/1 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று நிம்மதி அடைந்தது.

- Advertisement -

பாபர் அசாம் உலகசாதனை:
இந்த வெற்றியால் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் தொடரை வென்று ஆஸ்திரேலியாவிற்கு தக்க பதிலடி கொடுத்து பழிதீர்த்தது என்றே கூறலாம். அதிலும் முக்கியமான 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 349 ரன்கள் மெகா இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேஸிங் செய்து சாதனை படைத்தது.

Pakistan

அந்த போட்டியில் வெறும் 83 பந்துகளில் 114 ரன்களைக் குவித்து சதமடித்த பாபர் அசாம் நேற்றைய 3-வது போட்டியிலும் சதமடித்து பாகிஸ்தானின் மானத்தைக் காப்பாற்றினார். இதன் காரணமாக இந்த ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்து ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற அவர் இந்த தொடரின் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் தனது 16-ஆவது ஒருநாள் சதத்தை அடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 16 சதங்களை அடித்த வீரர் என்ற தென் ஆப்பிரிக்காவின் ஹாஷிம் அம்லா சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 சதங்களை அடித்த வீரர்களின் பட்டியல் இதோ:
1. பாபர் அசாம் : 84 இன்னிங்ஸ்
2. ஹாசிம் அம்லா : 94 இன்னிங்ஸ்
3. விராட் கோலி/டேவிட் வார்னர் : 110 இன்னிங்ஸ்

இதையும் படிங்க : பஞ்சாப் அணியை வீழ்த்தணுனா சி.எஸ்.கே இந்த விஷயத்தில் மாற்றம் செய்தே ஆகனும் – விவரம் இதோ

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற முகம்மது யூசுப் சாதனையையும் உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார்.

Advertisement