பஞ்சாப் அணியை வீழ்த்தணுனா சி.எஸ்.கே இந்த விஷயத்தில் மாற்றம் செய்தே ஆகனும் – விவரம் இதோ

CSKvsPBKS
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி 15-வது ஐபிஎல் தொடரானது வெற்றிகரமாக துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் விளையாடி தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் இரண்டாவது ஆட்டத்திலாவது வெற்றி பெறுமா என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்களை குவித்த சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் முதல் முறையாக தோற்று மோசமான சாதனையை படைத்தது.

CSK-1

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இன்று மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து தங்களது மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி விளையாடவுள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அதுமட்டுமின்றி ரசிகர்களும் சென்னை அணி இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது சென்னை அணி இந்த தொடர் தோல்விகளை தவிர்க்க முக்கிய சில விடயங்களை சரிசெய்ய வேண்டும். சென்னை அணியின் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் பார்முக்கு வரவில்லை என்றாலும் சென்னை அணியின் பேட்டிங் ஓரளவு திருப்திகரமாக உள்ளது. துவக்கத்தில் விக்கெட்டை இழக்காமல் இருந்தால் நிச்சயம் சென்னை அணி பெரிய அளவு ரன்குவிப்பிற்கு செல்லும்.

CSK Lost to LSG

அதன்காரணமாக தற்போது பேட்டிங்கில் எந்தவித மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் பந்துவீச்சில் தான் நமது பலவீனம் தற்போது உள்ளது. ஏனெனில் 14 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட தீபக் சாகர் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளதால் அனுபவம் மற்ற பந்துவீச்சாளர்கள் துஷார் பாண்டே, முகேஷ் சவுத்ரி, ஷிவம் டுபே போன்றவர்கள் நிறைய ரன்களை விட்டு கொடுக்கின்றனர். இதன் காரணமாக தற்போது சென்னை அணி பந்து வீச்சில் சில மாற்றங்களை செய்தே ஆக வேண்டும் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் போட்டிகள் பெரும்பாலும் மும்பையை சுற்றி நடைபெறுவதாலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருப்பதனாலும் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே வலுவான வேகப்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்க வேண்டும். அந்த வகையில் சென்னை அணியை பலப்படுத்த வேண்டும் எனில் நிச்சயம் அதிவேகமாக பந்து வீசும் வீரர்களான ஆடம் மில்னே, க்றிஸ் ஜோர்டான் ஆகிய பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க : மும்பை அணி இப்படி மோசமான தொடர் தோல்விகளை பெற காரணம் என்ன? – இதுதான் அவங்க வீக்னஸ்

அப்படி இல்லாமல் மீண்டும் சுமாரான வேகம் வீசும் பந்துவீச்சாளர்களை தெரிவு செய்தால் இந்தப் போட்டியிலும் வெற்றி பெறுவது கடினம்தான். சென்னை அணி பஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டும் எனில் நிச்சயம் பந்துவீச்சு கூட்டணியை சரியாக கட்டமைத்து பலமான வீரர்களை இறக்கினால் மட்டுமே இன்றைய போட்டியில் சி.எஸ்.கே வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement