மும்பை அணி இப்படி மோசமான தொடர் தோல்விகளை பெற காரணம் என்ன? – இதுதான் அவங்க வீக்னஸ்

MI
- Advertisement -

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி ஒரு மிகப்பெரிய அணியோ அதனைப் போன்றே ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை உடைய அணியாக திகழும் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆண்டுதோறும் மிகப்பெரிய வரவேற்புடனும், ஆரவாரத்துடனும் போட்டியை துவங்கும் மும்பை அணி தங்களது முதல் போட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக தோல்வியை சந்தித்து வருகிறது. ஆனால் இம்முறை இரண்டாம் போட்டியிலும் தோல்வியை சந்தித்ததால் தற்போது மும்பை அணியின் ரசிகர்கள் முன்பை விட சற்று கூடுதல் வருதத்திலேயே இருக்கின்றனர்.

Mi

- Advertisement -

ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரின் முதலாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய மும்பை அணியானது ஒரு கட்டத்தில் போட்டியில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதிநேரத்தில் பும்ரா, பாசில் தம்பி போன்ற பவுலர்களின் மோசமான பந்து வீச்சு காரணமாக கடைசி நேரத்தில் டெல்லி அணியிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்து தோற்றது.

அதேபோன்று நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில் சென்ற மும்பை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பொல்லார்டு களத்தில் நின்றும் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது. இப்படி 2 ஆட்டத்திலும் வெற்றிக்கு அருகில் சென்றும் மும்பை அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மும்பை அணி இப்படி தொடர் தோல்வியை சந்திக்க என்ன காரணம் என்பது குறித்த தெளிவான விவரத்தை தான் இந்த பதிவில் நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

MI

அதன்படி மும்பை அணி இந்த ஆண்டிற்கு முன்னர் அணியில் இருந்து சில மிக முக்கியமான வீரர்களை வெளியேற்றியது. அவர்களை வெளியேற்றியது தற்போது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் துவக்க வீரர் டிகாக், ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியா, க்ருனால் பாண்டியா, வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் ஆகியோரை அந்த அணி வெளியேற்றியது மிகப்பெரிய இழப்பை தந்துள்ளது.

- Advertisement -

அதேவேளையில் சூர்யகுமார் யாதவ் அணியில் தக்கவைக்கப்பட்டாலும் காயம் காரணமாக அவர் வெளியில் இருப்பதால் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்றே கூறலாம். குறிப்பாக மிடில் ஆர்டரில் எப்போதுமே பலம் வாய்ந்த அணியாக திகழும் மும்பை அணி கடப்பாறை பேட்டிங் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஏனெனில் துவக்க வீரர்கள், மிடில் ஆர்டர் மட்டுமின்றி பின்வரிசையில் கூட பொல்லார்டு, ஹார்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா என மேட்ச் வின்னிங் பேட்டிங் வரிசை நீண்டிருக்கும்.

Hardik

ஆனால் தற்போது உள்ள அணியில் அதுபோன்ற மிட்ச் வின்னிங் வீரர்கள் கிடையாது. மிடில் ஆர்தரிலும் அன்மொல்பிரீட் சிங், திலக் வர்மா போன்ற அனுபவம் இல்லாத வீரர்கள் இருப்பதும் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போன்று பந்துவீச்சில் தற்போது மும்பை அணி பும்ராவை மட்டுமே நம்பியுள்ளது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டோம்! பிசிசிஐயிடம் புகார் செய்த ஹைதெராபாத் நிர்வாகம் – எதற்கு தெரியுமா?

ஏனெனில் கடந்த சீசன்களில் டிரென்ட் போல்ட், ராகுல் சாகர் போன்ற வீரர்களும் கை கொடுத்தனர். ஆனால் இம்முறை பாசில் தம்பி, டேனியல் சாம்ஸ், மில்ஸ் போன்ற வீரர்கள் அதிக அளவு ரன்களை வாரி வழங்குகின்றனர். இப்படி சரியான ஆல் ரவுண்டர்கள், பவுலர்களை மும்பை அணி தேர்வு செய்யாததே இந்த தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Advertisement