நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டோம்! பிசிசிஐயிடம் புகார் செய்த ஹைதெராபாத் நிர்வாகம் – எதற்கு தெரியுமா?

- Advertisement -

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் இதுவரை கடந்த ஏறக்குறைய அனைத்து போட்டிகளும்கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய இந்த தொடர் நிறைய பரபரப்பான போட்டிகளுடன் வெற்றிகரமான முதல் வாரத்தை தொட்டுள்ளது. வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் நடைபெறும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க 10 அணிகளும் மொத்தம் 74 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

RR vs SRH

- Advertisement -

இந்த தொடரில் முதல் வாரத்தின் முடிவில் மும்பை, சென்னை உள்ளிட்ட ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணிகள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து இந்த வருட ஐபிஎல் தொடரை தோல்வியை முகத்துடன் தொடங்கியுள்ளது. மறுபுறம் ராஜஸ்தான், பெங்களூரு, பஞ்சாப் போன்ற பெரிய அளவில் கோப்பைகளை வாங்காத ஒரு சில அணிகள் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு வெற்றிநடை போட தொடங்கியுள்ளன.

தோல்வியுடன் துவங்கிய ஹைதராபாத்:
அந்த வகையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ராஜஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்து 210 ரன்களை குவித்தது.

SRH vs RR

அதை தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் 2 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். போதாகுறைக்கு அந்த அணி பெரிதும் எதிர்பார்த்த அபிஷேக் சர்மா 9 ரன்களிலும் அப்துல் சமத் 4 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றமளிக்க 10 ஓவர்களில் 37/5 என அதிர்ச்சியான தொடக்கத்தை பெற்ற ஹைதராபாத் அதிலிருந்து கடைசி வரை மீளமுடியாமல் பரிதாப தோல்வி அடைந்தது.

- Advertisement -

சர்ச்சையான கேட்ச்:
முன்னதாக அந்தப் போட்டியில் 211 என்ற மெகா இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியின் முதுகெலும்பு வீரராகக் கருதப்படும் கேன் வில்லியம்சன் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா வீசிய 2-வது ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. ஏனெனில் பிரசித் கிருஷ்ணா அதிரடியாக வீசிய அந்த பந்து கேன் வில்லியம்சன் பேட்டில் எட்ஜ் வாங்கி ராஜஸ்தான் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கைக்கு சென்றது.

Catch IPL 2022

ஆனால் பிடிக்க முடியாத அளவுக்கு மிகுந்த வேகமாக அந்த பந்து வந்த காரணத்தால் சஞ்சு சம்சனின் கையில் இருந்து நழுவி போன நிலையில் நல்லவேளையாக அவருக்கு அருகில் முதல் ஸ்லீப் பகுதியில் நின்று கொண்டிருந்த தேவூட் படிக்கல் தரையோடு தரையாக தாவி பந்தை பிடித்தார். இருப்பினும் அந்த பந்து தரையில் பட்டதாக உணர்ந்த களத்திலிருந்த அம்பயர்கள் அதை உறுதி செய்ய 3-வது அம்பயரை தொடர்பு கொண்டனர். அதை சோதித்த கேரளாவைச் சேர்ந்த 3-வது அம்பயர் அனந்த பத்மநாபன் அவுட் கொடுத்தது கேன் வில்லியம்சன் உட்பட களத்தில் இருந்த அனைவருக்கும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

- Advertisement -

ஏனெனில் தேவூட் படிக்கல் பிடிப்பதற்குள் தரையில் லேசாக பட்டு பவுன்ஸ் ஆன பின்புதான் அவரின் கையில் அந்தப் பந்து தஞ்சமடைந்தது டிவி ரிப்ளையில் பார்த்தபோது தெளிவாக தெரிந்தது. அதனால் தவறான அவுட் கொடுத்த அந்த மோசமான அம்பயரின் கண்களை சோதிக்க வேண்டும் என்பது போல பல ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் திட்டித்தீர்த்தனர். ஏனெனில் வில்லியம்சன் போன்ற ஒரு முக்கியமான விக்கெட்டை அநீதியால் இழந்த ஹைதராபாத் கடைசிவரை அதிலிருந்து மீள முடியாமல் தோற்றுப் போனது.

kane williams

புகார் கொடுத்த ஹைதெராபாத்:
ஆனால் அதே அம்பயர் அந்தப் போட்டியில் மெதுவாக பந்து வீசியததற்காக கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது ஹைதராபாத் அணி ரசிகர்கள் மிகவும் கோபத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் தவறான அவுட் கொடுத்த அம்பயருக்கு எதிராக பிசிசிஐயிடம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் புகார் செய்துள்ளது. இதுபற்றி ஹைதராபாத் அணி நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர் பேசியது பின்வருமாறு :

- Advertisement -

“ஆம் இந்த அநீதி பற்றி பிசிசிஐயிடம் நாங்கள் புகார் செய்துள்ளோம். குறிப்பாக எங்களின் தலைமை பயிற்சியாளரின் கருத்துக்களின் படி இந்த புகாரை பதிவு செய்து அதற்கான முடிவு கிடைக்கும் வரை பின் தொடர உள்ளோம்” என கூறினார். இது பற்றி அந்த போட்டியின் முடிந்தபோது ஹைதராபாத் பயிற்சியாளர் டாம் மூடி பேசியது பின்வருமாறு. “டிவி ரீப்ளேயில் பார்த்த பின்பும் அது போன்ற அவுட் கொடுக்கப்பட்டது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.

இதையும் படிங்க : 2 ஆவது போட்டியிலும் தோல்வி. சென்னை அணியுடன் சேர்ந்து மோசமான நிலையை சந்தித்துள்ள மும்பை – விவரம் இதோ

களத்தில் இருந்த அம்பயர்கள் சரியாக நடந்து கொண்ட நிலையில் ரீப்ளேயில் பார்க்கும் போது அவுட் இல்லை என்பதற்கான ஆதாரம் தெளிவாக கிடைத்தது. நாங்கள் அம்பயர்கள் இல்லை என்றாலும் அந்த தருணத்தில் எது சரியான முடிவு என்பது எங்களுக்கு தெரியும்” என கூறினார்.

Advertisement