39/4 என ஹைதராபாத்தை தெறிக்க விட்டு 24.75 கோடி ஒர்த் காட்டிய நாக் அவுட் நாயகன் ஸ்டார்க்.. திரிபாதி கண்ணீர்

KKR vs SRH 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 21ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் பிளே ஆஃப் சுற்றின் குவாலிபயர் 1 போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அபிஷேக் ஷர்மா – டிராவிஸ் ஹெட் ஆகியோர் வழக்கம் போல அடித்து நொறுக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட்டை டக் அவுட்டாக்கிய மிட்சேல் ஸ்டார்க் ஆரம்பத்திலேயே தெறிக்க விட்டார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அடுத்த ஓவரிலேயே வைபவ் அரோரா வேகத்தில் 3 (4) ரன்களில் அபிஷேக் சர்மா பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

மிரட்டிய ஸ்டார்க்:
அடுத்த சில ஓவரில் நித்திஷ் ரெட்டியை 9 ரன்னில் காலி செய்த மிட்சேல் ஸ்டார்க் அடுத்து வந்த சபாஷ் அகமதை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அதனால் 39/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஹைதராபாத் அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஹென்றிச் க்ளாஸென் – ராகுல் திரிபாதி ஆகியோர் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினர். அந்த வகையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பாரினர்ஷிப் அமைத்து ஹைதராபாத் ஓரளவு மீட்டெடுத்த இந்த ஜோடியில் க்ளாஸென் 32 (21) ரன்களில் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அரை சதமடித்து போராடிய ராகுல் திரிபாதி 55 (35) ரன்காலில் ரன் அவுட்டானார். ஆனால் நன்கு செட்டிலாகியும் ஃபினிஷிங் செய்யாததால் செவிலியன் செல்லும் மாடிப்படியிலேயே அவர் கண்ணீர் விட்டு அழுதார். அடுத்ததாக வந்த அப்துல் சமத் 16, சன்வீர் சிங் 0, புவனேஸ்வர் குமார் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத் அணிக்கு கடைசியில் கேப்டன் பட் கமின்ஸ் 30 (24) ரன்கள் எடுத்தார். இருப்பினும் 19.3 ஓவரில் ஹைதராபாத்தை 159 ரன்களுக்கு சுருட்டிய கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 3, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 160 எடுத்தால் ஃபைனலுக்கு செல்லலாம் என்ற இலக்குடன் கொல்கத்தா விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: கோலியை கட்டி பிடிச்சும்.. கடைசி இடம் தான் கிடைச்சுது.. அதுக்கெல்லாம் ஐபிஎல் கோப்பை தரமாட்டாங்க.. கம்பீர்

முன்னதாக 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க் லீக் சுற்றில் பெரும்பாலான போட்டிகளில் சுமாராக செயல்பட்டதால் கிண்டல்களுக்கு உள்ளனர். ஆனால் 2015, 2023 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா வெல்வதற்கு பங்காற்றிய அவர் இந்த நாக் அவுட் போட்டியில் தக்க சமயத்தில் ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை எடுத்து தன்னை பெரிய போட்டிகளுக்கான சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement